மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா “ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக் குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இப்படத்தில் புதையலைத் தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோவாக( Black Sparrow) நடிக்கிறார்.
இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் படத்தின் முழுக் கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த வித்தியாசமான கதாப்பாத்திரத்திடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலாட்டாவாக அமைக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவதாகவும் அது மேலும் நகைச்சுவை உண்டாக்கும் படியும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
மஹத், ஐஸ்வர்யா, யோகிபாபு கூட்டணியுடன் நடிகை சாக்ஷி அகர்வால் கண்கவர் பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக இருக்கும். இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் சி இயக்கியுள்ளார். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
மஹத் ராகவேந்திரா ஏற்கனவே விஜய். அஜீத், சிம்பு படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஏற்கனவே இவன் தான் உத்தமன் என்ற பெயரில் ஹாரர் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் யாஷிகா நடித்துள்ளார். ஏற்கனவே மஹத் யாஷிகாவுக்கு காதல் என்று கிசுகிசு பரவியது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை மேக்வென் இயக்கி உள்ளனர். எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். இப்படமும் முடிவடைந்துள்ளது.