வனிதா விஜயகுமாரின் கொச்சையான வார்த்தைகளால் மிகவும் மனம் உடைந்த அம்மணியின் நிலை..!

by Logeswari, Dec 3, 2020, 12:23 PM IST

வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். இந்நிலையில் கொரோனா தாக்கத்தால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக அமைந்தது வனிதாவின் மூன்றாவது கல்யாணம் தான். வனிதா தனியாக ஒரு சேனல் தொடங்கினார்.இதற்கு பீட்டர் பால் என்பவர் உதவி செய்தார். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துவிட்டது. பீட்டர் பாலுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இருப்பினும் பல எதிர்ப்புகளை எதிர்த்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பலர் இந்த திருமணம் நீண்ட நாள் நிலைக்காது என்று சரியாக கணித்து இருந்தனர்.

அதுபோலவே திருமணம் ஆகி ஓராண்டு கூட சேர்ந்து வாழவில்லை. அதற்குள் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இதனால் பல பிரபல நடிகைகள் வனிதாவை எதிர்த்து பீட்டரின் முதல் மனைவிக்கு குரல் கொடுத்தார்கள். அதலில் ஒருவர் தான் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தமிழ் சினிமாவில் சமூகத்தை மையமாக கொண்டு அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹவுஸ் ஓனர் திரைப்படம் மத்திய அரசு விருதை அள்ளியது. தனியார் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் நடுவராக இருந்து பல பஞ்சாயத்துக்களை சுமுகமாக முடித்து வைத்து தமிழ் மக்களின் மனதில் ஒரு உயர்ந்த பதவியில் குடியேறினார்.

மீடியாவில் பல ஆயிரம் மக்கள் பார்ப்பார்கள் என்று தெரிந்தும் வனிதா அவர்கள் லட்சுமி ராமகிருஷ்ணனை மிகுந்த தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அசிங்கப்படுத்தினார். அதில் இருந்து லட்சுமி வனிதா பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஆனால் மக்கள் முன் வனிதாவால் அசிங்கபட்ட காயம் அவரின் மனதை விட்டு நீங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் பொதுக்கூட்டம் போன்ற எந்த நிகழ்ச்சிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த வலியில் இருந்து மீண்டும் மீள லட்சுமி ராமகிருஷ்ணன் புதியப்படத்தை ஒன்று இயக்கயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதுவும் கேரளாவில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்கவுள்ளார்.

More Cinema News


அண்மைய செய்திகள்