அக்கா நடிகையை பிரிந்து தவிக்கும் தங்கை நடிகை.. படங்கள் வெளியிட்டு ஏக்கம்..

by Chandru, Dec 3, 2020, 12:24 PM IST

நடிகை காஜல் அகர்வால், நடிகை நிஷா அகர்வால் சகோதரிகள். காஜல் அகர்வால் விஜயுடன் துப்பாக்கி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நிஷா அகர்வால் தமிழில் இஷ்டம் என்ற படத்திலும் தெலுங்கில் ஏமாண்டி இ வேலா, சோலோ, கஸின்ஸ் என ஒரு சில படங்களில் நடித்தார். 6 வருடத்துகு முன்பே அதாவது 2014ம் ஆண்டே நிஷா நடிப்புக்கு முழுக்கு போட்டார். முன்னதாக 2013ம் ஆண்டு கரண்வலேச்சா என்பவரை மணந்து இல்லறத்தில் செட்டிலானார். இஷான் என்ற மகன் 2018ம் ஆண்டு பிறந்தான். அக்கா காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிவதற்கு முன்பே நிஷா திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயும் ஆகிவிட்டார்.

காஜல் அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவே நடித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் காஜல் அகர்வால் தனது பாய்ஃபிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக்கொண்டார். பிறகு ஒரு மாதம் அவர்கள் மாலத்தீவில் தேனிலவு சுற்றுலா மேற்கொண்டனர். நடிகை கவுதம், காஜல் இன்னும் வீடு திரும்பவில்லை. காஜல் புதிய படபிடிப்பிற்கு தயாராகி வருகிறார். அவர் கணவருட படப்பிடிப்பு தளத்துக்கு சென்றார். திருமணம் முடிந்து பிறகு தேனிலவு சென்ற காஜலை மீண்டும் நேரில் பார்க்க முடியாமல் ஏக்கத்தில் இருக்கிறார் தங்கை நிஷா. காஜலுடன் தான் இருக்கும் பழைய படத்தையும், புதிய படத்தையும் வெளியிட்டு தனது ஏக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதில் அக்கா காஜலை பெரிய அளவில் மிஸ் செய்கிறேன் என தெரிவித்திருக்கிறார். அதற்கு பதில் அளித்திருக்கும் காஜல்.நானும் உன்னை மிஸ் செய்கிறேன் சீக்கிரமே நேரில் சந்திக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். காஜல் அகர்வால் திருமணத்துக்காக நடிப்புக்கு முழுக்கு போடவிரும்பவில்லை. நடிப்பு எனது தொழில் அதை தொடர்ந்து செய்வேன் என்று திருமணத்துக்கு முன்பே அறிவித்திருந்தார். அதன்படி அவர் தொடர்ந்து புதிய படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார். ஏறகனவே கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் காஜல், சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்திலும் நடிக்கிறார். தவிரடிகே இயக்கும் திகில் படமொன்றிலும் நடிக்கிறார். அதற்கான டெஸ்ட் ஷூட்டிங்கிலும் காஜல் கலந்து கொண்டார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்