ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் லட்சக்கணக்கவர்களின் தேடுதல் முக்கிய அங்கம் வகிக்கிறது. அப்படி தேடப்படுவர்களில் பிரபலங்கள் அல்லது அரசியல் தலைவர்கள் சில சமயம் அடல்ட் நடிகைகள் கூட முதலிடம் பிடிக்கின்றனர். இந்த 2020 ஆண்டில் இந்த தேடுதல் சற்று வித்தியாசமாக அமைந்திருக்கிறது. யாஹூ வில் தேடப்பட்டதில் முதலிடம் பிடித்தவர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் நடித்தவர். எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகள் படைப்பார் என்று சுஷாந்த் மீது பாலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியிலும் நம்பிக்கை நிலவி வந்தது.
ஆனால் கடந்த ஜூன் மாதம் சுஷாந்த் சிங் வீட்டில் தூக்கு போட்டு தற்கொல செய்து கொண்டார் என்ற தகவல் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர் பின்னர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி சம்பந்தப்பட்டிருந்தார். அவருக்கு போதை மருந்து கொடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போதை மருந்து வழக்கில் ரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். யாஹூ இணையதளத்தில் 2020ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் முதலிடம் பிடித்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சுஷாந்த் காதலி நடிகை ரியா சக்ர்போர்த்தி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து ராகுல் காந்தி 4வது இடத்திலும், மத்திய அமைச்சர் அமித்ஷா 5 வது இடத்திலும், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே 6 வது இடத்திலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 7வது இடத்திலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 8வது இடத்திலும், அமிதாப்பச்சன் 9வது இடத்தில் உள்ளனர். யாஹூவில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் ரியாவுக்கு அடுத்தபடியாக கங்கனா, தீபிகா படுகோன், சன்னி லியோன், பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளனர்.