ஹேக் செய்யப்பட்ட நடிகை டிவிட்டர் கணக்கு மீட்பு..

Advertisement

நடிகர், நடிகைகள் சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களது பர்சனல் விஷயம் முதல் பணி நிமித்தம் வரை எல்லாவற்றையும் இதில் பகிர்கின்றனர். பல நடிகைகள் இனையதள் பக்கங்களை தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டுப் பட வாய்ப்புகள் பெறவும், சில நடிகைகள் பொதுவான விஷயங்களை பகிர்ந்து தங்களது சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர்.

சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகைகள் சிலரில் வரலட்சுமி சரத்குமாரும் ஒருவர் கொரோனா கால கட்டத்தில் அவர் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டார். அத்துடன் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் செய்தார்.இந்நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் சமூக ஊடக கணக்குகள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இயக்குனர் சேரன் ஆகியோரின் கணக்குகள் இதுபோல் முடக்கப்பட்டது. பின்னர் அவைகள் மீட்கப்பட்டன.

வரலட்சுமி தனது சமூகவலை தள கணக்குகள் முடக்கப்பட்டது பற்றி நேற்று முன்தினம் அறிவித்ததுடன் அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கடுமையான முயற்சிக்குப் பிறகு வரலட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தை மீட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும் போது, "எனது கணக்கை மீட்டெடுத்த டிவிட்டருக்கு நன்றி. திரும்பி வருவதில் மகிழ்ச்சி .." என்றார்.இன்ஸ்டாகிராமையும் வரலட்சுமி மீட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "நீங்கள் பார்க்கும் அனைத்தையும் நம்ப வேண்டாம். எனது இந்த கணக்கு இன்னும் கொஞ்சம் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அர்த்தத்தோடு பதிவு இருந்தால் எதையும் எப்படி நம்புகிறோம் என்பதை நான் உணர்ந்தேன். எனது இன்ஸ்டா கணக்கை நன்றியுடன் திரும்பப் பெற்றுள்ளேன் . மேலும் எனது பதிவுகளைத் திரும்பப் பெற இன்னும் வேலை நடந்து வருகிறது.

நாம் அனைவரும் தேடுகிறோம். அதேசமயம் சமூக ஊடகங்களில் சொந்த சிந்தனையுள்ளவர்களாக நாம் இருக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் உங்களை நம்ப வேண்டும்.சமூக ஊடகங்களில் ஏதேனும் சரியானதாகத் தோன்றுவதால், அது உண்மையில் உண்மை என்று அர்த்தமல்ல. ஜாலியாக இருங்கள், வாழ்க்கையை வாழுங்கள், உங்கள் சமூக ஊடகங்களை அனுபவியுங்கள், ஆனால் அதை உங்கள் வாழ்க்கையை முந்திக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கே என்னை அதிகமாக நேசிப்பதற்கும், நீங்கள் யார் என்பதை நேசிப்பதற்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கிறது. அது ஓர் அழகான விழிப்புணர்வு என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>