நட்சத்திர ஓட்டலில் ரூ 15 கோடி முதலீடு செய்த நடிகை..

by Chandru, Dec 6, 2020, 09:51 AM IST

நடிகர், நடிகைகள் தற்போது நடிப்பில் சம்பாதிப்பதை தொழிலில் முதலீடு செய்கின்றனர். நடிகர் ரகுல் ப்ரீத் சிங் கோடிகளில் முதலீடு செய்து உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். நடிகை பிரணிதா கடந்த 2015ம் ஆண்டு பெங்களுர் புறநகர் பகுதியில் தண்ணீர் தொழிற்சாலை தொடங்கி லாபகரமாக நடத்தி வருகிறார். நடிகை நமீதா கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி தொடங்கி நடத்தி வருகிறார். நடிகை சமந்தா சொந்தமாக பேஷன் டிசைன் கம்பெனி தொடங்கி நடத்துகிறார். இதற்காக கொரோனா லாக்டவுனில் பேஷன் டிசனிங் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். நடிகர் சூரி மதுரையில் ஓட்டல்களில் கோடிகளில் முதலீடு செய்து நடத்துகிறார். வில்லன் நடிகரும் கொரோனா கால கட்டத்தில் பல்லாயிரம் பேருக்கு உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவான சோனு சூட் மும்பையில் நட்சத்திர ஓட்டல் நடத்தி வருகிறார்.

இந்த ஒட்டலை கொரோனா காலகட்டத்தில் சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் தங்கி பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி அளித்தார். இதுபோன்ற நடசத்திர தொழில் அதிபர்கள் பட்டியலில் தற்போது மற்றொரு பிரபல நடிகையும் இணைந்திருக்கிறார். தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததுடன். குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் ஷில்பா ஷெட்டி. இவர் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது மும்பையில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 10 முதல் 15 கோடிவரை முதலீடு செய்து 50 சதவீத ஷேர்கள் வாங்கி இருக்கிறார். கிட்ட தட்ட அவர் நட்சத்திர ஓட்டல் அதிபராகி இருக்கிறார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிடும்போது, இது தயாராகிவிட்டது, விரைவில் நடைமுறைக்கு வருகிறது என கூறியிருக்கிறார். முன்னதாக அவர் தனது ஓட்டலுக்கு பாலிவுட் நண்பர்கள், தோழிகள் சிலரை ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்தார்.

அதில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் அவரது மனைவி நடிகை ஜெனிலியா கலந்துகொண்டனர். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தராவும் இதில் பங்கேற்றார். கடந்த 9 மாதத்தில் முதல்முறையாக இன்றுதான் இரவில் வெளியில் வந்து உணவு எடுத்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்களுடன் பழகினேன் என தெரிவித்தார் ஷில்பா. முன்னதாக ஷில்பா, ராஜ்குந்தரா இருவரும் தங்கம் பத்திரம் விற்கும் நிறுவனம் ஒன்றில் பார்டனாராக இருந்தனர். அப்போது விற்ற பத்திரத்தில் கோடிகள் பணம் வாங்கிக்கொண்டு தங்கம் தராமல் ஷில்பாவும் ராஜ்குந்தராவும் ஏமாற்றிவிட்டனர் என்று வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் மும்பை போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் அவர் பொய் சொல்வதாக ஷில்பா செட்டி தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நிகம்மா மாறும் ஹங்கமா2 ஆகிய படங்களில் ஷில்பா நடிக்க உள்ளார்.

More Cinema News


அண்மைய செய்திகள்