நடிகர்கள் பாத்திரம் கழுவும் போது நான் கொரோனா படம் எடுத்தேன்.. சர்ச்சை இயக்குனர் அதிரடி..

by Chandru, Dec 6, 2020, 14:35 PM IST

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழில் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகின. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன். கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி நடித்த டேனி, யோகிபாபு நடித்த காக்டெய்ல் என பல படங்கள் ஒடிடியில் வரிசை கட்டி வெளியானது பெரிய படமாக சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதேபோல் தெலுங்கு, இந்தி மொழிகளிளும் பல படங்கள் ஒடிடியில் வெளியாகின.இயக்குனர் ராம்கோபால் வர்மா அடல்ட் படங்கள் தயாரித்து ஒடிடியில் வெளியிட்டார். அதேநேரம் கொரோனா வைரஸ் என்ற படத்தையும் தயாரித்தார்.

இப்படமும் ஒடிடியில் வெளியான நிலையில் தற்போது ஆந்திரா, தெலங்கானாவில் தியேட்டர்களில் வெளியிட உள்ளார். அகஸ்தியா மஞ்சு இப்படத்தை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா தயாரித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வரும். இதுபற்றி கூறிய ராம்கோபால் வர்மா “கொரோனா காலகட்டத்தில் எல்லாம் மூடியிருந்த போது இந்த படத்தை நாங்கள் படமாக்கினோம். கொடிய கொரோனா வைரஸ் கூட எங்களுக்கு ஆசீர்வதித்தது. படப்பிடிப்பின்போது ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. திரையுலகில் நடிகர் நடிகைகல் உள்ளிட்ட எல்லோருமே ஓய்வெடுப்பது அல்லது பாத்திரங்களை கழுவுதல் போன்றவற்றை செய்யும் நேரத்தில் நாங்கள் இதனை படமாக்கி இருக்கிறோம்.

திரைப்படத்தயாரிப்பை எதுவும் தடுக்க முடியாது என்பதை நிரூபிக்க இதுபோன்ற நேரத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கொண்ட ஒரு திரைப்படத்தை நாங்கள் படமாக்கினோம். இதை சாத்தியமாக்கியதற்காக கொரோனா வைரஸுக்கு நான் உண்மையில் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் 300 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு வர்மா கூறினார். இந்த படம் ஏற்கனவே OTT இல் வெளியிடப்பட்டது. இப்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் ஐயங்கார், வம்ஸி சாகந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தெலுங்கானாவில் நடந்த கவுரவக் கொலைகளின் அடிப்படையில், கொலை என்ற படமும், அதிகரித்து வரும் பலாத்கார வழக்குகளின் அடிப்படையில் திஷா என்ற படமும், டோலிவுட்டில் பிரபல நடிகரின் வசதியான குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட அல்லு என்ற படத்தையும் வர்மா அறிவித்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார். ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். இவர் வம்பிழுக்காத பிரபலங்களே இல்லை எனலாம். கடந்த மாதம் இவர் வெளியிட்ட டிவிட்டர் பதவில் மறைந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு பற்றியும் அதற்கு பின்னால் இருந்த மர்மங்கள் குறித்தும் சசிகலா என்ற பெயரில் படமாக்க உள்ளதாக அறிவித்ததுடன் இப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் அதாவது இந்த மாதம் வெளியாகும் என்றும் அறிவித்திருக்கிறார்.

You'r reading நடிகர்கள் பாத்திரம் கழுவும் போது நான் கொரோனா படம் எடுத்தேன்.. சர்ச்சை இயக்குனர் அதிரடி.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை