மூத்த நடிகர் மாரடைப்பில் மரணம்.. முதல்வர் இரங்கல்..

by Chandru, Dec 7, 2020, 13:56 PM IST

கொரோனா காலகட்டத்தில் சில முக்கிய நடிகர்கள் மரணம் அடைந்திருக்கின்றனர். இந்தி நடிகர் ரிஷிகபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா போன்றவர்கள் மரணம் அடைந்தனர். தற்போது இந்தியில் அனிகபூர் போன்ற பல முன்னணி நடிகர்கலடன் நடித்த சீனியர் நடிகர் ரவி பட்வர்தன் மாரடைப்பில் மரணம் அடைந்தார். மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் காலமானார். மூத்த நடிகர் ரவி பட்வர்தனுக்கு 83 வயது ஆகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இவருக்கு மனைவி, மகள், இரண்டு மகன்கள், மருமகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளனர். ரவி பட்வர்தன் மூச்சுத் திணறல் காரணமாக டிசம்பர் 5 நடிகர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தானே நகரின் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு 9.30 மணியளவில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தார் கூறும்போது, முன்னதாக ரவி பட்வர்தனுக்கு சில சுவாச பிரச்சினைகள் இருந்தன, வீட்டிலேயே வலிப்பு ஏற்பட்டது, எனவே நாங்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனாலும் சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார் என்றனர். ரவி பட்வர்த்தன் கடைசியாக மராத்தி தொலைகாட்சி நிகழ்ச்சியான அகபாய் சசுபாயில் காணப்பட்டார். 200 க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி படங்களிலும் 150 க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். மூத்த நடிகருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே டிவிட்டரில் மெசேஜ் பகிர்ந்தார்.

அவர் கூறும்போது, நடிப்புடன் கதாபாத்திர வேடங்களுக்கு வெயிட் கொடுத்த மூத்த நடிகரின் மரணம் பெரிய இழப்பு. அவருக்கு கண்ணீர் அஞ்சலி என தெரிவித்தார். மராத்தி திரைப்படமான ஆரண்யக்கில் த்ரித்ராஷ்டிராவாக ரவி பட்வர்தன் நடித்திருந்தார். இந்தி மற்றும் மராத்தி படங்களான அங்குஷ், ஆஷ்யா அசவ்யா சுனா, அம்பார்த்தா மற்றும் ஜோதிபா பூலே போன்ற படங்களில் நடித்துள்ளார். அனில்கபூருடன் தேசாப் படத்தில் இணைந்த நடித்த ரவி பட்வர்தன் மேலும் ஷ்ரத்தா, சேஹ் சோயாரே போன்ற படங்களில் நடித்தவர் அதன்பிறகு பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு ஜீ மராத்தியின் அகபாய் சசுபாயில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி நேசித்தனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்