98 வயதிலும் கொரோனாவை வென்ற சீனியர் நடிகர்.. வைரஸுக்கும் பெப்பே.. காலனுக்கும் பெப்பே..

by Chandru, Dec 8, 2020, 10:47 AM IST

பாலிவுட்டில் கொரோனா தொற்று பரவலாகப் பரவியது. அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், தமன்னா உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு மீண்டனர். அதே போல் அமீர்கான் தாயார், போனிபூர் மற்றும் சல்மான்கான் வீட்டு பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனால் சல்மான் கான், போனி கபூர் தனிமைப்படுத்திக் கொண்டதுடன் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டனர்.

நடிகர் சஞ்சய் தத்துக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று தெரிந்தது. ஆனால் நுரையீரலில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. மும்பை மருத்துவமனையில் சேர்ந்து அதற்கான சிகிச்சை பெற்று மீண்டார். பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதற்கிடையில் பிரபல இந்தி நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் போன்றவர்கள் கொரோனா கால கட்டத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இவர்களுக்கெல்லாம் சீனியர் நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் திலீப் குமார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் அதாவது 1944ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்தவர் திலீப் குமார். 1944 இல் ஜ்வார் பாட்டா என்ற படம் மூலம் அறிமுகமானார். பல படங்களில் ஹீரோவாகவும் குணசித்ரா, வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக 1998ம் ஆண்டு கிலா என்ற படத்தில் நடித்தார். இந்தி நடிகை சாய்ரா பானுவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திலீப்குமாருக்கு தற்போது 98 வயது ஆகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புகிறார். சாய்ரா பானுவுக்கு 76 வயது ஆகிறது. திலீப் குமார் உடல் நிலை குறித்து அவர் ஒரு மெசேஜ் பகிர்ந்தார். அதில், அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது உடல் நிலைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா காலகட்டத்திலும் திலீப்குமாரை கொரோனா வைரஸ் அண்டவில்லை. ஆனால் திலீப்பின் உடன் பிறப்புகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் மரணம் அடைந்தனர். இதனால் திலீப் குமார் தம்பதியினர் இம்முறை தங்கள் திருமண ஆண்டு விழாவை கொண்டாடவில்லை. திலீப்குமாரின் இரண்டு இளைய சகோதரர்களான அஸ்லம் கான் (88) மற்றும் எஹ்சன் கான் (90) ஆகியோர் முறையே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வைரஸ் காரணமாக இறந்தனர். கொரோனாவுக்கும் பாசக்கயிறுடன் சுற்றி வரும் காலனுக்கும் பெப்பே காட்டிக் கொண்டிருக்கும் திலீப்குமார் நூற்றாண்டு கொண்டாடுவார் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து மெசேஜ் பகிர்ந்துள்ளனர்.

You'r reading 98 வயதிலும் கொரோனாவை வென்ற சீனியர் நடிகர்.. வைரஸுக்கும் பெப்பே.. காலனுக்கும் பெப்பே.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை