ரகுல் ப்ரீத் சிங் டேட்டிங் செய்வது யாருடன்?

by Chandru, Dec 8, 2020, 15:53 PM IST

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். ஆனால் புதிய ஹீரோயின்கள் வருகையில் அவரது பட வாய்ப்புகள் குறைந்தன. இந்நிலையில் தான் அவர் இந்தி படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அங்கு அவருக்குப் பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்காவிட்டாலும் அதிர்ஷ்ட காற்று தன் பக்கம் வீசும் என்று காத்திருக்கிறார். அதற்கேற்ப அஜய் தேவ்கன் இயக்கி நடிக்கும் மே டே என்ற இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அமிதாப்புடன் நடிப்பது தனது கனவு அது இப்படத்தின் மூலம் நிறைவேறுகிறது என ரகுல் கூறினார்.ரகுல் கடந்த 2 மாதத்துக்கு முன்வரை பெரிய டென்ஷனில் சிக்கி இருந்தார். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி போதை வழக்கில் கைதாகி சிறை சென்றார். அப்போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் போதை வழக்கில் ரகுல் ப்ரீத்தையும் கோர்த்துவிட்டார். இதையடுத்து போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ரகுலை அழைத்து விசாரணை நடத்தினார்கள். இந்த டென்ஷன் அவரை வேறு எதிலும் கவனம் செலுத்த விடாமல் செய்தது. ஒரு வழியாக அந்த சிக்கல் ஓரளவுக்கு அடங்கியது.

இதையடுத்து குடும்பத்துடன் அவர் மாலத்தீவு சென்று நேரத்தைச் செலவழித்தார். இரண்டு வார விடுமுறை பயணத்துக்குப் பிறகு ரகுல் அங்கிருந்து திரும்பினார். சென்னையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது ரகுல் பாய்ஃ பிரண்ட்டுடன் டேட்டிங் செய்வதாக நெட்டில் தகவல் பரவி வருகிறது. அதுகுறித்து ரகுல் கூறும்போது,நான் டேட்டிங் எதுவும் செய்ய வில்லை. சிங்கிளாகத்தன் இருக்கிறேன். காதலைவிடத் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம் என்றார்.ரகுல் ஏற்கனவே பாகுபலி நடிகர் ராணாவுடன் டேட்டிங் செய்வதாகக் கூறப்பட்டது. அதை இருவருமே மறுத்து வந்தனர். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் இருக்கிறோம் என்றனர். கொரோனா காலகட்டத்தில் ராணவுக்கும் அவரது காதலி மிஹீகாவுக்கும் திருமணம் நடந்தது.

ரகுல் ஆண்கள் அருகில் நின்று பேசவே பயப்படுவாராம் காரணம் யாருடனாவது பேசினால் அந்த விஷயத்தை உடனே அவரது சகோதரர் பெற்றோரிடம் சொல்லி மாட்டிவிட்டுவிடுவாரம். இப்படித்தான் ஒருமுறை விருந்து ஒன்றில் ஒருவர் நபர் இரண்டு தோழிகளுடன் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ரகுல் அருகில் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தாராம். உடனே பெற்றோரிடம் சென்று ரகுல் பாஃபிரண்டுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டார் என்று போட்டுக்கொடுத்து விட்டாராம். அதனாலேயே ரகுலுக்கு காதல் என்றால் பயமாம். ரகுலுக்கு தற்போது 30 வயது ஆகிறது. படங்களும் அதிக கைவசம் இல்லாத நிலையில் அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் ஒரு தகவல் உலா வருகிறது. ஆனால் தற்போதைக்கு ரகுல் சிங்கிள்தான் யாரையும் காதலிக்கவில்லை என்று அவரது நடப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை