டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு.. ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி கைது

by Nishanth, Dec 13, 2020, 13:38 PM IST

டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட புகாரில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்துத் தான் விளம்பரம் கிடைக்கும். இந்த ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் சேனல்களுக்குத் தான் முக்கிய விளம்பர நிறுவனங்கள் கூடுதலாக விளம்பரத்தை அளிப்பார்கள். இதில் சில டிவி சேனல்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக நீண்டகாலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. சில சேனல்கள், தங்களது சேனல் முன்னணியில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக கணக்கெடுப்பு நடத்தும் நிறுவனத்திற்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி உட்பட மூன்று சேனல்கள் இதுபோல டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் கடந்த அக்டோபார் 6ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக இதுவரை மும்பை போலீசார் 12 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ரிபப்ளிக் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியான விகாஸ் கஞ்சந்தானியிடம் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர். 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர். இந்நிலையில் இன்று விகாஸ் கஞ்சந்தானியை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஏற்கனவே ஒரு தற்கொலை புகார் தொடர்பாக ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்ததை தொடர்ந்து தான் அவரால் சிறையிலிருந்து வெளியே வர முடிந்தது.

You'r reading டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு.. ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி கைது Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை