சிருஷ்டி டாங்கேவின் “கட்டில்” படத்துக்கு தணிக்கையில் என்ன சான்று?

by Chandru, Dec 13, 2020, 14:08 PM IST

கடந்த சில வருடங்களாக தமிழில் அடல்ட் படங்கள் என்ற பெயரில் ஆபாச வசனங்களுடன் படங்கள் வெளிவருகின்றன. சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து அடல்ட் படத்துக்கு அப்பட் போஸ்டர் வெளியிட்டின் போது பலத்த எதிர்ப்பு எழுந்தது. இயக்குனர் பாரதிராஜா அப்படத்தை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் கலாச்சரத்தை கெடுக்கும் இதுபோன்ற படங்கள் எடுக்கக்கூடாது என்றார். இது பரபரப்பானது. தீபாவளி தினத்தில் இப்படம் தியேட்டரில் வெளியானது. தணிக்கையில் இப்படத்துக்கு ஏ சான்று கிடைத்தது. நுங்கம்பாக்கம் என்ற படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவானது. அதற்கும் பலத்த எதிர்ப்பு வந்தது.

தணிக்கையில் அப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு சென்று தீர்ப்பு பெற்று அதன் பிறகே அப்படம் வெளியானது. இந்நிலையில் ஒரு புதிய படத்துக்கு கட்டில் என பெயரிடப்பட்டது. அந்த பெயருக்கு சிலர் அதிருப்தி தெரிவித்தனர். இதில் சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். இ.வி. கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ளார். இந்த படத்துக்கு தணிக்கை குழுவில் ஒரு கட் கூட இல்லாமல் யு சான்று வழங்கி உள்ளது. கட்டில் திரைப்படத்திற்கு “யூ” சான்றிதழ் கிடைப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும், ஒரு கட் கூட இல்லாமல் கிளியர் யூ சான்றிதழ் கிடைப்பது அரிதான விஷயம். இ.வி.கணேஷ்பாபு தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கும் “கட்டில்” திரைப்படத்திற்கு கிளியர் 'யூ' நற்சான்றிதழை திரைப்பட தணிக்கைக்குழு வழங்கியிருக்கிறது.

இது பற்றி இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது: எனது திரைப்படத்திற்கு “கட்டில்” என்று பெயர் வைத்தவுடன் சிலர் வேறு மாதிரி பார்த்தார்கள். இன்றைய இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் நமது இந்திய கலாச்சாரத்தின் உன்னதத்தை, தமிழக பாரம்பரிய நுட்பத்தை, குடும்ப உறவுகளின் மேன்மையை தெரிவிக்கும் விதமாக ஜனரஞ்சகத்தோடு கட்டில் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று பல முறை கூறி வந்தேன். இந்த கருத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் விதமாக கட்டில் திரைப்படத்திற்கு கிளியர் “யூ” தணிக்கை சான்றிதழை சென்சார் போர்ட் வழங்கியிருப்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.

சமூகத்தின் மீது மிகவும் அக்கறைக் கொண்டு திரைப்படத்துறையில் அறுபது ஆண்டுகளாக பயணிக்கும் பி. லெனின் கட்டிலுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தொகுப்பையும் செய்திருக்கிறார். இவ்வாறு இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு கூறினார்... இதில் சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இருக்கி றார்கள்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்