ரஜினி அரசியல் பஞ்ச் வசனம் சினிமா பாடலானது.. எல்லாத்தையும் மாத்துவோம்

Advertisement

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சமீபத்தில் டிவிட்டரில் அறிவித்தார். அதில் டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றார். அத்துடன் ஹேஷ் டேக்காக எல்லாத்தையும் மாத்துவோம் என்ற பஞ்ச் வசனம் பகிர்ந்தார். இது பரபரப்பானது. தற்போது வசனம் பவுடர் என்ற படத்துக்காக பாடலாகி உள்ளது. எல்லாத்தையும் எல்லாரையும் வாழவைப்போம் என்ற பாடலை பவுடர் படத்திற்காக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார். 'பவுடர்' படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ- நிகில் முருகனை நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி. இவர், தனது முதல் படமான 'தாதா 87'-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர்.

தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது 'பவுடர்'. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோ பாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடிக்க இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ 'உள்ளுர் நாயகன் 'நிகில் முருகன், சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பவுடர் படத்திற்காக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி நடிகர் ரஜினிகாந்த் பேசிய 'எல்லாத்தையும் மாத்துவோம்' வசனத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பாடல் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீஜி கூறியதாவது: தாதா 87 படத்தில் ஒரு நிமிஷம் 'தலை சூத்திடுச்சி ' பேசிய வசனம் மையமாக வைத்து நான் எழுதிய பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது .தற்சமயம் எல்லாத்தையும் மாத்துவோம் எல்லாரையும் வாழவைப்போம் எல்லாரையும் சேக்குறோம் இனி.. என்ற பாடல் எழுதி இருக்கிறேன். 'பவுடர் படத்திற்கு ரஜினிகாந்த் பேசிய வசனம் பொருத்தமாக இருப்பதால் நடிகர் ரஜினிகாந்த் ரசிகனாக பாடல் எழதியதில் மகிழ்ந்தேன். இவ்வாறு இயக்குனர் கூறினார். இப்படத்தின் ஒளிப்பதிவை ராஜா பாண்டி ஆர்.பி.ஏற்கிறார். கதை,திரைக்கதை வசனம், இயக்கம் விஜய்ஶ்ரீஜி, ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் 2021 பவுடர் திரையில் வெளியாகும்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>