ஸ்ருதி ஆணாக மாறினால் யாரை காதலிப்பார்? அவரே அளித்த பதில்..

Advertisement

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா காலகட்டத்தில் 6 மாதமாக வீட்டுக்குள்ளேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அவருடன் துணைக்கு ஒரு செல்ல பூனைக்குட்டி வளர்த்தார் அதனுடன் விளையாடுவது, இசை கம்போஸ் செய்வது, உடற்பயிற்சி செய்வது என பொழுதை கழித்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் அவர் படப்பிடிப்புக்கு தயார் ஆனார். விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்தார், அதன் பிறகு தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் கிராக் படத்தில் நடித்தார். தற்போது பவன் கல்யாண் உடன் வக்கீல் சாப் படத்தில் நடிக்கிறார். ஸ்ருதிஹாசனிடம் விரைவாக பதில் அளிக்கும் சில கேள்விகள் கேட்டபோது ருசிகரமான பதில் அளித்தார். அவரிடம் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி: நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை..
பதில்: ஐய்யோ!
கேள்வி: நீங்கள் ஓய்வு எடுக்க நினைக்கும் இடம்..
பதில்: என் வீடு.
கேள்வி: பிடித்த ஓட்டல்?
பதில்: லண்டனில் உள்ள போன் டாட்டிஸ்..
கேள்வி: உங்களின் அழகான இடம்?
பதில்: எனது கூந்தல்.
கேள்வி: எதைக்கண்டு பயப்படுவீர்கள்?
பதில்: பல்லி, பாம்பு என்றால் ரொம்ப பயம்.
கேள்வி: எந்த ஆண் பிடிக்கும்?
பதில்: தாடி.. தாடி வைத்த ஆண் பிடிக்கும்..
கேள்வி: நீங்கள் ஆணாக இருந்திருந்தால் உங்களுடைய காதலியாராக இருப்பார்?
பதில்: ஐ லவ் தமன்னா. அவர் தேவதை போன்றவர், கவர்ச்சியானவர்.
கேள்வி: உங்களை கவர்ந்த நபர்?
பதில்: என் தந்தை கமல்ஹாசன் மற்றும் என்னுடைய நண்பர்கள்..
கேள்வி: எந்த ஒரு நடிகருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்: பிரபாஸ். அவர் முக்கிய நடிகர். அவருடன் இதுவரை இணைந்து நான் நடிக்கவில்லை.
உங்களை உடல் தகுதியில் கவர்ந்த நடிகை?
ஹால்லே பெர்ரி.
கேள்வி: உங்கள் வாழ்வில் இப்போது யார் இருக்கிறார்?
பதில்:யாரும் இல்லை. நான் இபோது சிங்கிள்.
இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறினார்.

ஸ்ருதி ஹாசன் இரண்டு ஆண்டுக்கு முன் லண்டனை சேர்ந்த மைமேல் கோசேல் என்பவருடன் டேட்டிங் செய்து வந்தார். ஒரு வருடத்துக்கும் மேலாக இருவரும் இணைபிரியாலிருந்தனர். தனது தந்தை கமல்ஹாசனுக்கு மைக்கேலை அறிமுகம் செய்துவைத்தார். பின்னர் கமல்ஹாசன் லண்டன் சென்று மைக்கேல் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். ஒருகட்டத்தில் ஸ்ருதி, மைக்கேல் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூட தகவல் வெளியானது. ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் மைக்கேலிடம் பிரேக் அப் செய்துக்கொண்டு பிரிந்தார் ஸ்ருதிஹாசன். பழைய டேட்டிங் விஷயங்களை மறந்துவிட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>