நிறைமாதத்திலும் ஷூட்டிங்கில் பங்கேற்கும் நடிகைகள்..

Advertisement

நடிகைகள் தங்களது திருமணம் பற்றியே சில காலத்துக்கு முன்பு வரை வாய் திறக்க மாட்டார்கள். திருமணம் முடிந்து கர்ப்பமாகி விட்டால் குழந்தை பிறந்து உடல் தோற்றம் இயல்பு நிலைக்கு வரும்வரை யார் கண்ணிலும் பட மாட்டார்கள். இது ஒரு காலம் ஆனால் இப்போது காலம் வேகமாக மாறி இருக்கிறது. நடிகைகள் தங்கள் திருமணத்தை முடித்து விட்டு கர்ப்பமாகி கொஞ்சம் வயிறு தெரிய ஆரம்பித்தால் உடனே அந்த தோற்றத்தை நெட்டில் பகிர்ந்து விடுகின்றனர். 3 மாதம் தொடங்கி நிறை மாதம் வரை இதுபோல் ஏராளமான படங்களைக் கர்ப்ப தோற்றத்துடன் பகிர்கிறார்கள். அத்துடன் நிறை மாத்திலும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர்.

நடிகை சினேகா கடந்த வருடம் 2வது குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டிருந்த நிலையில் தனுஷுடன் பட்டாசு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுவும் அதில் ஆக்‌ஷன் காட்சிகளில் சினேகா நடிக்க வேண்டி இருந்தது. அதற்காக அடிமுறை எனப்படும் சண்டைப் பயிற்சியும் முறைப்படி கற்று சண்டைக் காட்சியிலும் நடித்தார். சில காட்சிகளில் அவரை கீழே தள்ளிவிடும் காட்சிகளிலும் நடித்தார். கர்ப்பமான தோற்றத்திலேயே சினேகா நடித்ததற்கு படக்குழு அவருக்குப் பாராட்டு தெரிவித்தது.

அதே போல் இந்தி நடிகை கரீனா கபூர் நிறைமாத கர்ப்பமாக இருக்கும் தோற்ற படத்தை செல்ஃபியாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். அவ்ர் கூறும்போது,பெண்கள் ஆரோகியாமகவும் ஃபிட்டாகவும் இருக்க வேண்டும். ஃபிட்னஸ் என்பது மிகவும் முக்கியம். இது வாழ்க்கையின் ஒரு பகுதி. யோகா, உடற்பயிற்சி அல்லது காலையில் நடைப்பயிற்சி போன்றவற்றால் நான் அதை அனுபவிக்கிறேன்: என்றார்.

நாங்கள் இருவரும் இப்போது புமா ஷூட்டிங்கில் இருக்கிறோம் என அதற்கு மெசேஜ் பதிவிட்டார்.புமா நிறுவனம் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான ஆடைகளை அறிமுகப்படுத்துகிறது அதற்குத் தூதுவராக கரீனாவை அந்நிறுவனம் நியமித்துள்ளது. அதற்கான படப்பிடிப்பில் இருப்பதைத்தான் கரீனா குறிப்பிட்டிருக்கிறார். இருவர் என்று அவர் குறிப்பிட்டது வயிற்றிலிருக்கும் குழந்தையும் சேர்த்துத்தான்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>