நிர்வாண படம் வெளியிட்ட பிரபல நடிகை.. பிறந்த நாள் பரிசாம்..

by Chandru, Dec 15, 2020, 11:01 AM IST

கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா. அழகிய அசுரா படத்தில் நடித்தார். அதன் பிறகு 6 வருடம் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் கவர்ச்சி காட்ட மாட்டேன், முத்தம் தர மாட்டேன் என கடைப்பிடித்த சில பல பாலிஸிகள் தான் காரணம். பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் ரீ என்ட்ரி ஆனார். கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி விதியை தளர்த்தினார், பட வாய்ப்புகள் மெல்ல வந்தது. இதற்கிடையில் அவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற என 5 படங்களில் நடித்து வருகிறார்.ரெஜினா நடிப்பு தவிர இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். மங்களூர் அருகே உள்ள பண்ணைக்குச் சென்றவர் கெமிக்கல் உரங்கள் பயன்படுத்தாமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட பயிர்களைக் கண்டார். முள்ளங்கி, கோங்குரா போன்ற காய்களை அறுவடை செய்தார். பிறகு தண்ணீர்பவி பீச் பகுதிக்குச் சென்று நீந்தினார், தண்ணீர் சறுக்கு விளையாட்டிலும் பங்கேற்றார்.

இதுபற்றி ரெஜினா கூறும் போது,எனது நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டு இயற்கை விவசாய பண்ணைக்கு வந்தேன். இந்த உலகுக்கு தீங்கில்லாத வழியில் எல்லோரும் பயணிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதன் அடிப்படையில் எனது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட இந்த இயற்கை விவசாய பண்ணைக்கு வந்தேன். பிறகு மங்களுரில் உள்ள தண்ணீர் பவி பீச்சுக்குச் சென்று நீர் சறுக்கு, நீச்சல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என்றார். இந்நிலையில் ரெஜினாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். அவருக்குப் பலரும் இணைய தளங்களில் வாழ்த்து பகிர்ந்தனர். அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக அவர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

ஆற்றுப்பகுதியில் இரண்டு கைகளை உயர்த்தியபடி நின்றபடி உள்ள புகைப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி சொன்னார். அதே படத்திற்கு அடியில் ஒரு வாசகம் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தின் இடது பக்கத்தை நீங்கள் திருப்பினால் அதில் நிர்வாண போஸ் உள்ளது என குறிப்பிட்டார். அதைக் கண்ட ரசிகர்கள் ஆவலாகப் படத்தை இடதுபுற மாக நகர்த்திப் பார்த்த போது அதில் ரெஜினாவை குழந்தையில் எடுத்த படம் ஒன்றிரண்டு ஆடையில்லாமல் இருந்தது. அதைக்கண்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இப்படி எங்களை ஏமாற்றி விட்டீர்களே என்று அவர்கள் செல்லமாக மெசேஜ் பதிவிட்டனர்.

You'r reading நிர்வாண படம் வெளியிட்ட பிரபல நடிகை.. பிறந்த நாள் பரிசாம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை