முடங்கிய படப்பிடிப்புகள் ஜெட் வேகத்தில் நடக்கிறது.. பிஸியாகும் ஹீரோயின்கள்..

by Chandru, Dec 16, 2020, 16:24 PM IST

கொரோனா ஊரடங்கு மக்களையும் சரி, தொழில் துறையையும் சரி இரண்டையுமே முடக்கி போட்டுவிட்டது. அதிலிருந்து மீண்டு வர இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை. சினிமா உலகமும் கடந்த 8 மாதமாக முடங்கிய நிலையில் ஒன்றிரண்டு மாதமாக வேலைகளைத் தொடங்கிக் கொண்டிருக்கிறது.அண்ணாத்த, மாஸ்டர், வலிமை, ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் எல்லாம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படங்கள். ஊரடங்கின் விளைவு மாஸ்டர், ஜெகமே தந்திரம் மட்டுமே ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அண்ணாத்த, வலிமை படங்கள் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் தான் ஐதராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்து வருகிறார். அவருடன் நயன்தாராவும் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் நாள் நெருங்கி வருவதால் அண்ணாத்த ஷூட்டிங் ஜெட் வேகத்தில் நடக்கிறது. வலிமை படப்பிடிப்பும் ஐதராபாத்தில் ஒரு மாதம் நடந்து முடிந்து படக் குழு சென்னை திரும்பியது. மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங் தொடங்கி நடக்கிறது. இதில் சமந்தாவும் கலந்து கொண்டிருக்கிறார். அதேபோல் சிரஞ் சீவி நடித்து வந்த ஆச்சார்யா படப்பிடிப்பு 8 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. இதில் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். மேலும் ஸ்ருதிஹாசன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடிகைகள் வழக்கம்போல் ஷூட்டிங்கில் பிஸியாகி இருக்கிறார்கள். இந்நிலையில் ஊரடங்கில் வீட்டில் முடங்கிக் கிடந்த ரைஸா வில்சன் தற்போது படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணு விஷால் நடிக்கும் எப் ஐ ஆர் படத்தில் நடிக்கிறார் ரைஸா. அவர் தனது இணைய தள பக்கத்தில் ஒரு படம் வெளியிட்டிருக்கிறார். அதில் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டேன் என்று கையில் வசன பேப்பரை படித்தபடி ரசிகர்களுக்குத் தகவல் சொல்லி இருக்கிறார். முஸ்லிம் பெண்போல் மேக் அப் அணிந்திருக்கும் அவர் இப்படத்தில் அனிஷா குரேஷி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரைஸா. இதில் விஷ்ணு அபு பக்கர் அப்துல்லா என்ற இளைஞராக நடிக்கிறார். இவர் போலீஸால் தேடப் படும் குற்றவாளி வேடம் ஏற்றிருக்கிறார். இயக் குனர் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். யூடிப் பிரசாந்த சிறிய பாத்திரத்தில் நடிக்கிறார். அஸ்வத் இசை அமைக்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை