நடிகர் பெஞ்சமினுக்கு மாரடைப்பு : சிகிச்சைக்கு பணமின்றி சிரமப்படுதாக தகவல்

விஜய், வடிவேலு ஆகியோருடன் நடித்த நடிகர் பெஞ்சமின் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பணமின்றி சிரமப்படுகிறார்.

by Balaji, Dec 17, 2020, 10:51 AM IST

மேடை நாடக நடிகரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடிகட்கு திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் வடிவேலுவை இவர் திட்டும் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்துள்ளார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ள பெஞ்சமின் சேலத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் அந்த மருத்துவமனையில் மேல் அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.இதனிடையே மருத்துவச் சிகிச்சைக்காக திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கோரி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை