மாலத்தீவிற்கு சிட்டாய் பறந்திருக்கும் ஹன்சிகா மோத்வானி..

by Logeswari, Dec 17, 2020, 10:55 AM IST

தமிழ் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் ஹன்சிகா. இவர் எங்கேயும் காதல், ஆம்பள, அரண்மனை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி படம் எடுத்தாலே அவரின் மனதில் முதல் கதாநாயகியாக வருவது நமது ஹன்சிகா மேடம் தானாம். அப்படி எடுக்கப்பட்டது தான் ஆம்பள மற்றும் அரண்மனை திரைப்படம். சுந்தர் சி ஒரு நேர்காணலில் குஷ்பூ இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதுபோல ஹன்சிகாவும் உள்ளார் என்று தமாஷாக கூறி இருந்தார். ஹன்சிகா நடிக்கும் படங்களை கண்ட ரசிகர்கள் இவருக்கு 'குட்டி குஷ்பூ' என்ற பெயரை சூட்டினர்கள்.

திரைப்படம் மட்டும் இல்லாமல் இவர் விளம்பரத்திலும் நடிக்க கவனத்தை காட்டி வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த மஹா திரைப்படம் கொரோனாவால் தள்ளிப்போனது. இந்நிலையில் இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் படக்குழுவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பல நடிகைகள் சுற்றுலா தலமான மாலத்தீவுக்கு படை எடுத்து வருகின்றனர். முதலில் காஜல் அகர்வால் தனது தேனிலவை கொண்டாட அவரது கணவருடன் சென்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் தங்கி இருந்தார். இவர் தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது கூட சொல்லலாம்.

இவரை அடுத்து ரகுல் அவரது தந்தையின் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவிற்கு சென்று இருந்தார். பின்னர் சமந்தா, வேதிகா மற்றும் சிலர் சென்றனர். இவர்களை பார்த்து நம்ம ஹன்சிகாவிற்கும் ஆசை வந்துவிட்டது போல அதான் உடனே மாலத்தீவை சுற்றிப்பார்க்க சிட்டாய் பறந்து விட்டார். இவர் அங்கே எடுத்த புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விமானத்தை ஒரு கையில் பிடித்து 'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்' என்பது போல அலைகளை பார்த்து கொண்டு போஸ் கொடுத்து நிற்கிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை