மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்திற்காக எடுக்கபட்ட மாணிக்ய மலரேயா பூவி என்ற பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டது. ஒமர் லுலு இயக்கத்தில் ஒரு அடார் லவ் படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இந்த பாடலுக்கும் ஷான் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். நடிகர்-தயாரிப்பாளர் - இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் இந்த பாடலைப் பாடி உள்ளார். இந்த பாடலை விட இந்த பாடலில் நடித்து உள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் கண் அசைவுகள் சமூக வலைதளங்களில் கண்ணாபிண்ணாவென வைரல் ஆனது.
கேரளாவின் திருச்சூரை சொந்த ஊராக கொண்ட பிரியா பிரகாஷ் வாரியர் அங்குள்ள விமலா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். அவர், ஏற்கனவே மோகினியாட்டம் பயின்றுள்ளார். மேலும், பாடுவதிலும் ஆர்வம் கொண்ட அவர் ஓவர் நைட்டில் பிரபலம் ஆனார். தற்போது இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 50 லட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும், யூடியூப்பில் இந்த பாடல் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடியை தாண்டிவிட்டது. இதை தொடர்ந்து, பிரியா பிரகாஷ் வாரியரை இமிடேட் செய்து, பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் பிரியா வாரியரின் ஒரு ஆடர் லவ் என்ற மலையாள திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.