தற்கொலை செய்து கொள்வேன் - அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீ ரெட்டி

Advertisement

தெலுங்கு நடிகர் சங்கத்திலும் உறுப்பினர் அட்டை வழங்க மறுக்கிறார்கள். உறுப்பினர் அட்டை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் பிரபலங்களின் பெயர்களை ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுவேன் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மிரட்டி வந்தார்.

அதன்படி முதன்முதலாக அரைகுறையாக ஒருவரது முகம் தெரியும்படியான ஒரு புகைப்படத்தை ஸ்ரீலீக்ஸில் வெளியிட்டார். தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ‘நீ எங்கே என் அன்பே” என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்த பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு மீதும்வும் ஸ்ரீலீக்சில் சிக்கி உள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை டைரக்டர் சேகர் கம்முலு மறுத்து இருந்தார். ஆனால் தொடர்ந்து ஸ்ரீரெட்டி மீது குற்றம் சுமத்தி வந்தார். இந்த குற்றச்சாட்டிற்கு தெலுங்கு திரையுலகினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் இவர் நடிப்பதற்கான உரிமத்தினை தெலுங்கு திரையுலகம் ரத்து செய்தது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட துறையின் இந்த முடிவினை எதிர்த்தும், தனக்கு நியாயம் வேண்டும் என கோரியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு திரைப்பட அலுவலகத்துக்கு வந்தார். திடீரென தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணக் கோலத்தில் அலுவலகத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, “ஒரு தெலுங்கு நடிகையான எனக்கு சினிமா வாய்ப்பு யாரும் கொடுப்பதில்லை. தெலுங்கு நடிகர் சங்கத்திலும் உறுப்பினர் அட்டை வழங்க மறுக்கிறார்கள். உறுப்பினர் அட்டை வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறி வருகிறார். இச்சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 - thesubeditor.com

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>