பான் இந்திய படங்களில் ஹீரோக்கள் கவனம்.. காதல் ஹீரோவும் களத்தில்..

by Chandru, Dec 28, 2020, 12:44 PM IST

சமீபத்திய படங்களில் முன்னணி ஹீரோக்கள் நடித்தால் அந்த படங்களை 5 மொழி படங்களாக உருவக்கும் புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. பிரபாஸ் நடித்த பாகுபலி படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் என பான் இந்தியா படமாக திரைக்கு வந்து வெற்றி பெற்றது. அதன் தாக்கம் மற்ற ஹீரோக்கள் படங்களிலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. அடுத்த கன்னட நடிகர் யஷ் நடித்த கே.ஜி எஃப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி அதுவும் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி எஃப் 2 படமும் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய திடமிட்டுள்ளனர். இதில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் என பல மொழி நடிகர்கள் நடிக்கின்றனர்.

அதே போல் ராஜமவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படமும் பான் இந்தியா படமாக உருவாகிறது. ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன், அலியாபட், வெளிநாட்டு நடிகை நடிக்கின்றனர். பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ், கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும் படங்களும் பான் இந்தியா படமாக உருவாகிறது. தமிழில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது. அதற்கான புரமோஷன் பணிகளும் தொடங்கி இருக்கிறது. அந்த வரிசையில் காதல் நாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என மாநில ரீதியான படங்களில் நடித்து வந்தார் விஜய் தேவர்கொண்டா. இளம் பெண்கள் அவரின் ரசிகைகளாக அவரை சுற்றி வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். அப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது விஜய் தேவர்கொண்ட ஆக்‌ஷன் படத்தில் நடிக்கிறார். புரி ஜெகநாத் இயக்குகிறார். பல வெற்றிப்படங்களை இயக்கி அளித்துள்ள புரிஜெக நாத் டைரக்ஷனில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு ஃபைட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கியது.

ஊரடங்கு காலத்தில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படாமலிருக்கிறது. இப்படத்திற்காக விஜய் தேவரகொண்டா உடலை கட்டுக்கோப்பாக்க முடிவு செய்துள்ளார். சிக்ஸ் பேக் தோற்றம் ஆணழகன் போன்ற கட்டுமஸ்தான தோற்றத்துக்கு தயார் ஆகும் வகையில் ஜிம்மிற்கு சென்று கடுமையான பயிற்சிகளை தொடங்கி இருக்கிறார். அவர் காலகளுக்கு பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. அருகில் அவரது பயிற்சியாளர் நின்று எப்படி பயிற்சி செய்வது என்பதை குறிப்புக்கள் கொடுக்கிறார். இப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகிறது.

More Cinema News


அண்மைய செய்திகள்