இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுப்பாங்கனு பார்த்தா, அதுக்கு பதிலா ப்ரீஸ் டாஸ்க் கொடுத்து, சொந்தங்கள எல்லாம் வரப்போறாங்க. ஓக்கே ஒரு நல்ல செண்டிமெண்ட் ட்ராமா, அழுகாச்சி காவியத்துக்கு மனசை தயார் படுத்திகிட்டு ரெடியானேன். ஆனா முதல்ல வந்ததே ஒரு ஆக்ஷன் ப்ளாக்.
ஷிவானியோட அம்மா தான் முதல்ல வந்தாங்க. பாட்டு போடும் போதே அழுதுட்டே இருந்தது. உள்ள வந்த உடனே அம்மாவை கட்டி பிடிச்சு அழுதாலும், அந்தம்மா ஷிவானியை தள்ளி விட்டுட்டே இருந்துது. என்னடா நடக்குதுனு யோசிக்கும் போதே தனியா கூட்டிட்டு போய் லெப்ட் & ரைட் வாங்கிருச்சு.
ஏன்? எதுக்கு? என்னனு தெரியாம இந்த திடீர் தாக்குதல்ல ஷிவானி நிலைகுலைஞ்சு போய்ட்டாங்க. கெட்டவார்த்தை எல்லாம் போட்டு திட்டினது ஷிவானியால ஏத்துக்க முடியல.அந்தம்மாவும் நிறுத்தற பாட்டை காணோம். சவுண்ட் கேட்ட உடனே அத்தனை பேரும் தெறிச்சிட்டாங்க. கடைசி வரைக்கும் பாலா மூஞ்சியை கூட பார்க்காம போய்ட்டாங்க ஷிவானி அம்மா. அவங்களும் ஆரி ஆர்மில இருக்காங்கனு அப்புறமா தான் தெரிஞ்சுது.
ஷிவானி அழுது முடிச்சதுக்கு அப்புறம் பாலா அழுதுட்டு இருந்தான். சுத்தமா அடங்கிட்டான் பாலா.நீங்களாவது அட்வைஸ் பண்ணிருக்கலாம் இல்லனு ரியோ கிட்ட கேட்டுட்டு இருந்தாரு ஆரி. ரியோவுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்னு நாம யோசிக்கறா மாதிரியே ரியோவும் யோசிச்சுட்டு இருந்தாரு.
ஷிவானி 19 வயசு பொண்ணு தான். இந்தளவு திட்டிருக்க வேண்டியதில்லை. கொஞ்சம் பதமா எடுத்து சொல்லிருக்கலாம்.கேப்பி பத்தி பாலா சொன்னதை கேப்பி கிட்டயே விளக்கம் கேட்டுட்டு இருந்தான் ஆஜித்.அடுத்து பாலாவோட அண்ணன் ரமேஷ் வந்தாரு. அந்த எபிசோட் தான் ஜாலியா இருந்தது. சாப்பிடக் கூப்பிட்ட போது உப்புமா ஞாபகத்துல தெறிச்சு ஓட்றதுக்கு ரெடியா இருந்தாரு.
இந்த டாஸ்க் இந்த வாரம் முழுசா போகும்னு நினைக்கிறேன். அடுத்து செண்டிமெண்ட் எபிசோட் தான் வரும். வெயிட் பண்ணுவோம்.