யாரடி நீ மோகினி ஸ்வேதாவா இது?? அப்பவே கொள்ள அழகு.. சுத்தி போடணும்

by Logeswari, Dec 30, 2020, 19:41 PM IST

ஜீ தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி. மற்ற சீரியலை ஒப்பிடும் பொழுது இந்த சீரியலில் சற்று வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். சைத்ரா ரெட்டி என்பவர் இந்த சீரியலில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் அறிமுகமாகி கதாநாயகியாக நடித்தார்.

இவரது அழகில் மயங்கிய இளைஞர்கள் இன்னும் எழுந்த பாடில்லை. இந்நிலையில் இவருக்கு திருமணம் என்ற செய்தி வெளியானவுடன் இளைஞர்கள் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தனர். இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் சோசியல் மீடியாவில் இயங்கி கொண்டிருக்கிறது. இவருக்கு ராக்கேஷ் என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர்.

கொரோனா காலம் என்பதால் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று சிலர் மட்டுமே இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக விளங்கக்கூடியவர். இவரது ரசிகர்களின் ஆசைக்கிணங்க அவரது கல்லூரி படிக்கும் பொழுது எடுத்த போட்டாவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் அப்பவே செம அழகு என்று அவரை போற்றி கமெண்ட்ஸ் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்