டேட்டிங் சென்ற இடத்தில் நடிகைக்கு நிச்சயதார்த்தமா?

by Chandru, Jan 1, 2021, 09:19 AM IST

கோலிவுட்டில் திரையுலக ஜோடிகள் டேட்டிங் என்பது குறைவாகவே உள்ளது. நயந்தாரா-விக்னேஷ் சிவன், நிக்கி கல்ராணி- ஆதி என விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ள நிலையில் பாலிவுட்டில் இந்த கலாச்சாரம் பெருகிவிட்டது. பல ஜோடிகல் டேட்டிங் என்ற பெயரில் ஜோடியாக சுற்றிதிரிவது, பார்ட்டியில் பங்கேற்பது அதிகரித்திருக்கிறது. அதில் ஒரு ஜோடி ரன்பீர்கபூர், அலியாபட். கடந்த ஒரு வருடமாக நெருக்கமாக பழகிவரும் ஜோடி. விரைவில் அலியாபட்டை திருமணம் செய்வேன். அதற்கான ஏற்பாடுகளை எங்கள் இரண்டு குடும்பத்தினரும் செய்து வருகிறார்கள் என்றார். இந்த பேட்டிக்கு பிறகு புத்தாண்டை கொண்டாட இருவரும் மாலத்தீவு புறப்பட்டு சென்றனர். அடுத்தநாள் அவர்கள் இருவர் பற்றி பரபரப்பு தகவல் பரவியது. மாலத்தீவில் ரன்பிர், அலியாபட் ஜோடி டிசம்பர் 30ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் செய்வதாக அந்த தகவலி தெரிவித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நிச்சயாதார்த்த படங்களை இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அலியாபட் தந்து படத்தை வெளியிட்டு அத்துடன் ஒரு பதிவும் வெளியிட்டார். அதில், என்ன போய்கள் நம் முன்னால் இருந்தாலும்.. மகிழ்ச்சிதான்..என தெரிவித்திருக்கிறார். அலியாவின் இந்த பதில் அவரத் நிச்சயாதார்த்தம் பற்றிய வதந்திக்கான பதில் என கூறப்படுகிறது. அலியாபட் இந்தியில் நடித்துக்கொண்டிருந்த நிலையில் முதன்முறையாக தென்னிந்திய படமான ஆர் ஆர் ஆர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் ராம் சரண் ஜோடியாக அலியாபட் நடிக்கிறார். கடந்த நவம்பர் மாதம் அலியாபட் ஐதராபாத் வந்து இப்படத்தின் படப்பிடிப்பில் கல்ந்துகொண்டார்.

அவர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் படபிடிப்பு முடிந்து மும்பை சென்றார். மீண்டும் ஜனவரி மாதம் நடக்கும் படப்பிடிப்பில் அலியாபட், ராம் சரண் நடிக்கும் காட்சிகளை படமாக திட்டமிடப்பட்டது. ஆனால் திடீரென்று ராம் சரண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டர். இதையடுத்து இவர்கள் இருவரும் நடிக்கும் படப்பிப்டிப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. அலியாபட் மணக்க உள்ள ரன்பீர்கபூர் பிரபல இந்தி நடிகர் மறைந்த ரிஷிகபூர் மகன் ஆவார். ரன்பீர் கபூர் ஏற்கனவே கேதிரானா கைப் உடன் டேட்டிங் செய்துவந்தார். இருவரும் லிவிங் டு கெதர் பாணியைலும் வாழ்ந்தனர். ஆனால் இதற்கு ரிஷி கபூர் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கட்டத்தில் கேத்ரினா கைப்புடன் பிரேக் அப் செய்துக்கொண்டார் ரன்பீர் கபூர். அதன்பிறகே அலியாபட்டுடன் ரன்பீருக்கு காதல் மலர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை