உடலை நேசிக்கும் வெடி நடிகை.. எப்படி இருக்கிறீர்களோ அதுவே அழகு

by Chandru, Jan 1, 2021, 16:07 PM IST

திரைப்பட நடிகைகள் அழகாக, ஷேப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அவ்வளவு அழகாகவும், ஷேப்பாகவும் இருக்கும் பல நடிகைகள் போதிய திறமை இல்லாததால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை. சுமாராக இருக்கிறார் என்று சிலரால் கூறப்படும் நடிகைகள் புகழ் பெற்றுவர் களாகிறார்கள். சமீரா ரெட்டி பற்றி அவர் நடிக்கும் சமயங்களில் உடல் ரீதியாக விமர்சனங்கள் வந்திருக்கிறது. ஆனால் அவர் அதுபற்றி கண்டு கொள்ளாமல் தனது உடல் பற்றி நேர்மறையான உணர்வுடன் இருந்தார். அந்த எண்ணமே அவரை திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்தும் துணிவை கொடுத்தது. 2002ம் ஆண்டு இந்தியில் மைனேதில் துஜிகோதியா என்ற படம் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தர்னா மானா ஹை, பிளான், மிஷாஃபிர் என பல படங்களில் நடித்தார். பிறகு 2004ம் ஆண்டு பாலகாட் பாப்பா என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

2008ம் ஆண்டு வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அசல், வெடி, நடுநிசி நாய்கள் போன்ற பல படங்களில் நடித்தார். கடந்த 2014ம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இரண்டு குழந்தைக்கு தாய் ஆகி இருக்கிறார். கர்ப்பமாக இருந்த காலத்தில் கூட அவர் கர்ப்ப தோற்றத்தில் பல படங்களை வெளியிட்டார். நீச்சல் குளத்தின் அடி ஆழம்வரை சென்று நீந்தி அந்த படங்களையும் கர்ப்பிணி தோற்றத்தில் வெளியிட்டார். அவரது இந்த படங்கள் பல பெண்களுக்கு உடல் ரீதியான ஒரு நம்பிக்கையையும் தைரியத்தைய்ம் அளித்தது என்றுதான் கூற வேண்டும். உடல் ரீதியான ஒரு நேர்மறை சிந்தனையை எப்போதும் தனக்குதானே வைத்திருப்பதும் மற்றவர்களுக்கும் அந்த நம்பிக்கை வர வேண்டும் என்று சொல்லவும் சமீரா தயக்கம் காட்டியதில்லை.

புத்தாண்டையொட்டி சில படங்களை குழந்தைகளுடன் அவர் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும்போது, நீச்சல் உடை அணிவதில் எனக்கு சில பொருத்தமில்லாத தோற்றம் இருப்பதை நான் அறிவேன். ஆனாலும் இந்த அழகான தருணத்தில் என் இரண்டு குழந்தைகளுடன் நீச்சல் உடையில் நம்பிக்கையுடன் வலம் வந்துக்கொண்டிருக்கிறேன். முன்பெப்போதும் இல்லாத சந்தோஷத்துடன் இருக்கிறேன். 2021ம் ஆண்டில் உடல் ரீதியாக என்னை நான் சீராக்குவேன். ஆனால் இப்போதைய தருணத்தை நான் இழக்க விரும்பவில்லை. உங்கள் உடல் உங்கள் உணர்வை கவனிக்கிறது. அதற்கு அன்பும், நம்பிக்கையும் தரவேண்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதுவே அழகுதான் என்றார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை