கடந்த ஆண்டு இறுதி காலகட்டத்தில் பல நடிகைகள் விடு முறை பயணம் மேற்கொண்டு மாலத் தீவில் குவிந்தனர். நடிகை காஜல் அகர்வால் கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் தேனிலவு பயணமாக மாலத் தீவு சென்றார். அங்கு காதலனுடன் சினிமா பாணியில் பலவித போஸ்களில் புகைப் படங்கள் எடுத்த அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். நடிகை வேதிகா மாலத்தீவில் தங்கி அங்கிருக்கும் ஸ்பா அழகுநிலையம் சென்றார்.
தாமரை தடாகத்தின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த பாத் டப்பில் வெதுவெதுபான நீரில் மழைச் சாரலுக்கு இடையே ஜாலியாக குளித்தார். நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் மாலத்தீவு சென்றதுடன் அங்கு சைதன்யாவின் பிறந்த நாளை கொண்டாடினார். மேலும் பிரணிதா, டாப்ஸி, சோனாக்ஷி சின்ஹா என பல நட்சத்திரங்கள் மாலத் தீவில் முகாமிட்டனர். அவர்கள் அனைவரும் திரும்பிய நிலையில் புத்தாண்டு கொண் டாடுவதற்காக ஒரு சில ஜோடிகள் மாலத்தீவு புறப்பட்டனர்.
நடிகை நிஹாரிகா கணவர் சைதன்யாவுடன் தேனிலவும் புத்தாண்டும் சேர்த்துக் கொண்டாட மாலத் தீவு சென்றனர். பாலிவுட்டில் காதல் ஜோடியாகச் சுற்றித் திரியும் சித்தார்த் மல்ஹோத் ரா, கியாரா அத்வானி இருவரும் புத்தாண்டு கொண்டாடத்துக்கு மாலத்தீவு பறந்தது. இந்த ஜோடி காதலிப்பதாக கிசுகிசு வந்த நிலையில் அதை இருவரும் உறுதி செய்யாமலிருந்தது. மாலத் தீவுக்கு ஜோடியாகப் பறந்ததன் மூலம் தங்கள் காதலை வெளிப்படுத்தி உறுதி செய்தனர்.காதலனுடன் சென்றபோதும் கியாரா அத்வானி சில இடங்களில் தனிமையாகச் சுற்றி இன்பம் காணுகிறார். மாலத் தீவு என்றதும் கடற்கரையொட்டி உள்ள பகுதிகளில் நடிகைகள் புகைப் படங்கள் எடுத்துப் பகிர்ந்தனர்.
அதே போல் கியாரா அத்வானி பசுமையான மரங்கள் நிறைந்த பகுதியிலும் சுற்றித் திரிகிறார். சிவப்பு நிற பீச் உடை அணிந்தும் அதற்கேற்ப டாப்ஸ் மற்றும் தலையில் கிரே நிற ஸ்கார்ப் அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து ரசிக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். கூடவே சென்ற காதலன் சித்தார்த் மல்ஹோத்ராவை கியராவுடன் காணவில்லை.