சொந்தமாக ஸ்கிர்ப்ட் எழுதி அதை படமாக்கிக்கொண்டிருந்த நிலை மாறி ஏற்கனவே திருப்பங்கள் நிறைந்த ஸ்கிரிட்டுடன் உள்ளது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு. அந்த பிரபலங்களின் வாழ்க்கை தழுவிய ஸ்கிர்ப்ட்கலுடன் உருவாகும் திரைப்படங்கள் வசூலை அள்ளிக்கொட்டுகின்றன. காந்தி படத்தில் தொடங்கிய வசூல் இன்றளவும் தொடர்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படம் எம்.எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் உருவாகியது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனி வேடம் ஏற்று நடித்தார். இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆனது ரூ 104 கோடியில் உருவான இப்படம் 216 கோடி வசூலித்தது. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படம் சச்சின் ஏ பிலிலியன் டிரீம்ஸ் என்ற பெயரில் உருவானது. இதில் சச்சின் டெண்டுல்கரே நடித்திருந்தார். இப்படமும் ஹிட்டானது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாக்ஸிங் வீராங்கனை மேரி கோம் வாழ்க்கை அவரது பெயரிலேயே படமானது. இதில் மேரி கோம் ஆக இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா நடித்தார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி வசூலை குவித்தது. அடுத்து இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை படம் உருவாகிறது. இதில் மிதாலியாக டாப்ஸி நடிக்கவிருக்கிறார். மேலும் பளு தூக்கும் வீரங்கனை கர்ணம் மல்லேஸ் வரி, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் போன்றவர்களின் வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன. அதேபோல் 80களின் கிரிக்கெட் அதிரடி மன்னன், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் வாழ்க்கை படம் 83 என்ற பெயரில் உருவாகிறது. இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டு உலக கோப்பை வென்றது. அதை பிரதானமாக வைத்து படம் உருவாகிறது.
இதில் கபில் தேவ் வேடத்தில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். கபில் தேவுக்கு இன்று பிறந்த நாள் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரன்வீர் சிங் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வாழ்த்தில் ஹரியானாவின் சூறாவளி கபில்தேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருப்பதுடன் 83 பட நிறுவனம் சார்பில் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 83 படத்தை கபிர் கான் இயக்குகிறார். ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இப்படம் கடந்த 2020ம் ஆண்டு ஏபரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நவம்பர் மாதத்துக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இன்னும் நிலைமை சகஜ நிலைக்கு வராததால் இந்த ஆண்டு மார்ச் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.