தெலங்கானா மாப்பிள்ளையுடன் ஜோடி சேர்ந்த பிரபல நடிகை.. திருமண கோலத்தில் லீக்கான புகைப்படங்கள்..

by Logeswari, Jan 8, 2021, 10:09 AM IST

முதன் முதலாக தமிழ் சினிமாவில் பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் ஆனந்தி. இந்த திரைப்படத்தில் சாக்லேட் பாயான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்த்து நடித்திருந்தார். இப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு கயல் என்ற படத்தில் நடித்தார். பொறியாளன் திரைப்படத்தை விட கயல் திரைப்படம் இவருக்கு பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்தது. இதன் பிறகு இவர் கயல் ஆனந்தி என்றே வழங்கப்பட்டார். பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி வீரன், விசாரணை போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கியவர். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியானது.

இதில் இவர் கதாநாயகியாக நடித்திருந்த தோற்றம் மற்றும் அவரது நடிப்பு மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டது. இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கவுரவ கொலை பற்றிய தொகுப்பாய் இப்படம் இடம்பெற்று இருந்தது. இதனால் இப்படத்திற்கு அளவில்லாத விருதுகள் குவிந்தது. இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு 8 மணிக்கு ரகசிய திருமணம் என்று ஊடகத்தில் செய்திகள் பரவி வந்தது. சினிமாவில் இது போல ரகசிய திருமணம் என்பது சர்வ சாதாரண விஷயம் ஆகும். நடிகர்கள், நடிகைகள் என இருவர்களுமே ரகசிய திருமணத்தை செய்து கொள்கின்றனர்.

மாப்பிள்ளை தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற செய்தி மட்டும் கசிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த திருமணம் முழுக்க முழுக்க பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழப்போகும் திருமணம்.. எனவே இது காதல் திருமணம் அல்ல என்று குறிப்பிட்டுருந்தனர். இந்நிலையில் இன்று காலை முதல் கயல் ஆனந்தி மற்றும் அவரது கணவர் என இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போல பல புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இவை இணையத்தளம் முழுவதும் வைரல் ஆகி வருகின்றது. ஆனந்தியின் ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை