கார்த்திக் சுப்பராஜுக்கு நிகழ்ந்த மேஜிக் நிகழ்வு.. என்ன தெரியுமா?

by Chandru, Jan 11, 2021, 10:31 AM IST

திரையுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு உண்டு. அது நிறைவேறும்போது அதை மேஜிக் தருணமாக உணர்கின்றனர். சிலருக்கு இயக்குனர் ஆக வேண்டும். வெற்றி படங்களாக தரவேண்டும். இசை அமைப்பாளராக வேண்டும். சூப்பர் ஸ்டார் போல் ஹீரோவாக வேண்டும் இப்படிப் பல கனவுகள் திரையுலகினருக்கு உண்டு.கே.பால்சந்தர் ரஜினிகாந்த்தை அறிமுகப்படுத்தியபோது சூப்பர் ஸ்டார் ஆவார் என்று இருவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அது நிகழ்ந்தபோது இருவருமே அதை மேஜிக் தருணமாக உணர்ந்தார்கள்.

பீட்சா படத்தை இயக்குவதற்கு முன் கார்த்திக் சுப்பராஜிக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது தலைவர் சூப்பர் ஸ்டாரை ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. பீட்சா படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. நினைத்தபடி இயக்குனருக்கான இடத்தை முதல் படத்திலேயே பிடித்தார். அடுத்து ஜிகிர்தண்டா, இறவி, மெர்குரி எனப் படங்கள் இயக்கினார். இதற்கு அடுத்த படம் இயக்குவது பற்றி ஆலோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது. ரஜினிசாருக்கு வந்து கதை சொல்லுங்கள் என்று வந்த தகவலைக் கேட்டு இது கனவா? நனவா? என்ற நிலையில் ஆழ்ந்தார். ரஜினியைச் சந்தித்து பேட்ட படத்தின் கதையைச் சொன்னார் அது அவருக்குப் பிடித்துவிடவே நடிக்கச் சம்மதித்தார்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த்தை தான் சிறுவயதில் எப்படியெல்லாம் பார்த்து ரசித்தாரோ அதுபோல் நடிக்க வைத்தார் கார்த்திக் சுப்பராஜ். முதல் படம் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்த் இரும்பு கேட்டை திறந்துகொண்டு வீட்டுக்குள் வருவதுபோன்ற காட்சியைப் பேட்டை படத்தில் அமைத்தார். இந்த ஸ்டைல் வேண்டும் அந்த வேகம் வேண்டும் என்று ரஜினியிடம் கேட்டபோது எனக்கு வயதாகி விட்டது அதேபோல் வேகம் கேட்டால் எப்படி என்று ரஜினியே சொல்லும் அளவுக்கு பேட்ட படத்தில் ரஜினியின் வேகம், இளமை தோற்றம் எல்லாவற்றையும் பிரதிபலித்தார் இயக்குனர் . பேட்ட படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கார்த்திக் சுப்பராஜ் ஒரு மெசேஜ் வெளியிட்டார். ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்தவர் இப்படம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி டிவிட்டரில் கார்த்திக் சுப்பராஜ் கூறும் போது, "2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் என் வாழ்நாளின் மேஜிக் தருணம் நிகழ்ந்தது. சூப்பர் ஸ்டார் நடிக்க பேட்ட படம் வெளியானது. இதில் பங்கெடுத்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.கார்த்திக் சுப்பராஜ் போலவே ரஜினியின் ரசிகர்கள் பேட்ட படத்தின் 2ம் ஆண்டை கொண்டாடினார்கள். அப்படத்தில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை ரசிகர்கள் நினைவு கூர்ந்தனர். பேட்டா ஹேஷ் டேக் இணைய தளத்தில் நேற்று டிரெண்டிங்கில் இருந்தது.இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சசி குமார், சிம்ரன் மற்றும் த்ரிஷா ஆகியோர் பேட்ட படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தனர். அனீருத் ரவிச்சந்தர் பாடல்களுக்கு இசை அமைத்தார் சன் பிக்சர்ஸ் தயாரித்தது.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ள ஜெகமே தந்திரம் விரைவில் வெளியாக உள்ளது.இதற்கிடையில், கார்த்திக் சுப்பராஜ் தற்போது சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் ஆகியோருடன் தனது வரவிருக்கும் படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

More Cinema News


அண்மைய செய்திகள்