மீண்டும் தனது இடத்தை துண்டு போட்டு பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

by Logeswari, Jan 11, 2021, 19:45 PM IST

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக ஓடி கொண்டிருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது முழுக்க முழுக்க கூட்டு குடும்பத்தை பற்றி சொல்லும் கதையென்பதால் மக்ககளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதனால் விஜய் தொலைக்காட்சியிலே மக்கள் அதிகம் விரும்பும் சீரியல்களின் பட்டியலில் இந்த சீரியலும் ஒரு அங்கமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருந்த முல்லை என்கிற விஜே சித்ரா திடீரென்று ஒரு மாதத்திற்கு முன்பு நட்சத்திர ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கில் இடம் பெற்றிருக்கும் பல மர்மங்களின் முடிச்சி விலகாமல் அப்படியே உள்ளதால் விசாரணை இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இவரின் இழப்பு சீரியல் குழு, நண்பர்கள், ரசிகர்கள், உறவினர்கள் என அனைவரையுமே பாதித்துள்ளது. முல்லையாக நடித்த சித்ராவின் இடத்தில் வேற யாரையும் நினைத்து பார்க்க முடியாது என்று ரசிகர்கள் தரப்பில் இருந்து பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருந்தது.

இருப்பினும் சீரியல் குழு அதனை காதில் வாங்கிக்கொள்ளாமல் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா என்பவரை புதிதாக அறிமுகம் செய்து வைத்தனர். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்கள் செல்ல செல்ல காவ்யாவை ரசிகர்கள் முல்லையாக ஏற்று கொண்டனர். அதனின் விளைவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தனது பழைய இடத்தை பிடித்துள்ளது.

You'r reading மீண்டும் தனது இடத்தை துண்டு போட்டு பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை