கந்துவட்டி பிரச்னையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தற்கொலைக்கு காரணம் தயாரிப்பாளரும், சினிமா ஃபைனான்சியருமான அன்புசெழியன் தான் என்பதால் இன்னும் பரபரப்பு அதிகரித்துள்ளது. அன்புச்செழியன் தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படக்கூடும். தயாரிப்பாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்திருப்பதால் கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது.