தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.பல்வேறு சிக்கல்களுக்கு இடையில் மாஸ்டர் திரைப்படம் நாளை உலகெங்கும் தியேட்டர்களில் வெளியிடப்பட உள்ளது.இந்த நிலையில் அந்த படத்தின் சில காட்சிகள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் நேற்று இணையத்தில் திருட்டு தனமாக வெளியானது கண்டு படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.எப்படி இந்த காட்சிகள் இணையதளத்தில் வெளியாகின என்பது குறித்து ரகசியமாகப் படக்குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.SDC Digital Cinema (Sony) Service Provider என்ற நிறுவனத்தில் இருந்து தான் மாஸ்டர் படத்தின் காட்சிகள் வெளியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது சட்ட பூர்வ நடவடிக்கைகளை எடுக்கத் தயாரிப்பாளர் தரப்பு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் Sony நிறுவனத்திடம் கொடுத்த பிரதியை யை திருப்பி வாங்கிவிட்டார். இதன் காரணமாகச் சோனி தயாரிப்பு உபகரணங்கள் மூலம் படங்களைத் திரையிடும் தியேட்டர்களில் மாஸ்டர் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை திட்டமிட்டபடி அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.