இடுப்பு நடனம் ஆடி மயங்கிய இளம் நடிகை..

by Chandru, Jan 14, 2021, 10:45 AM IST

நடிகைகளில் சிம்ரன், ஸ்ரேயா போன்றவர்கள் இடுப்பை ரப்பர்போல் வளைத்து நெளித்து ஆடி ரசிகர்களைக் கவர்வதில் வல்லவர்கள். இது இவர்களுக்கு ஸ்பெஷல் உடல் அசைவு நடனம் என்று கூட கூறலாம். அதேபோல் அந்த காலத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இடுப்பு வளைத்து நெளித்து ஆடுவதில் தேர்ந்தவர். தற்போது அவரது பெயரை சொல்ல வந்திருக்கிறார் அவரது மகள் ஜான்வி. இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமல்ல, அழகும் நிறைந்தவர். அவரது மறைந்த தாய் மற்றும் நடிகை ஸ்ரீதேவி போன்ற ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞர்.

மேலும் அவர் தனது நடன அசைவுகளை வீடியோக்களில் பதிவு செய்து வெளியிடுகிறார். 23 வயதான ஜான்வி சமீபத்தில் தனது பெல்லி டான்ஸ் அதாவது இடுப்பு நடனத்தின் ஒரு காட்சியை 'சான் சனனா' பாடலின் இசைக்கு ஏற்ப நடனமாடி அழகான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது 'காணாமல் போன போஸ்ட் பர்ரிட்டோ பெல்லி டான்ஸ் அமர்வுகள்' என்ற அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோவில், ஜான்வி ஒரு வெள்ளை மேல் மற்றும் வெள்ளை பாட்டியாலா காஸ்டிய்ம் அணிந்து சிக்கென இருந்தார். ஜான்வி ஆனந்த் எல் ராயின் 'குட்லக் ஜெர்ரி' படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் ஆர்யனுடன் தோஸ்த்தனா 2, கரண் ஜோஹரின் 'தக்த் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ஜான்வி கபூரை தமிழில் அறிமுகப்படுத்தப் பல இயக்குனர்கள் முயன்று வருகின்றனர். சசிகுமாரும் இந்த முயற்சியில் ஈடுபட்டார். பிறகு அஜீதுகுமார் ஜோடியாக நடிக்க வைக்க எண்ணினர். தெலுங்கிலும் ராஜமவுலி உள்ளிட்ட சில இயக்குநர்கள் ஜான்வியை தெலுங்கில் அறிமுகப்படுத்த முயன்றனர். ஆனால் யாருக்கும் பிடி கொடுக்காமல் கழுவுற மீனில் நழுவற மீனாக நழுவிக் கொண்டே இருக்கிறார்.

You'r reading இடுப்பு நடனம் ஆடி மயங்கிய இளம் நடிகை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அதிகம் படித்தவை