Wednesday, Apr 14, 2021

பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் சிக்கிய நடிகை...

by Chandru Jan 15, 2021, 10:39 AM IST

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாகப் போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்து மல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடத்திய 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதுடன்
பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 4 உறுப்பினர் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளை இந்த குழு முன் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த இந்த குழு அரசுக்கு ஆதரவான குழு எனக் குற்றம் சாட்டியுள்ள விவசாய அமைப்புகள், எனவே இந்த குழு முன் ஆஜராகமாட்டோம் என அறிவித்தன.இதனால் தலைநகர் டெல்லி பகுதி முற்றுகையிட்டது போல் தோற்றம் அளிக்கிறது.

இந்நிலையில் பஞ்சாபில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் குட் லக் ஜெர்ரி இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பஞ்சாப்பில் இந்த வாரம் நடக்கிறது. ஷூட்டிங்கில் பங்கேற்க ஜான்வி சென்றார். முதல் நாள் படப்பிடிப்பு நடந்தபோது அங்கு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாய குழு ஒன்று புகுந்து ஜான்வியை சந்திக்க வேண்டும் என்றனர். அவர்களை நடிகை ஜான்வி சந்தித்தார். அவரிடம் விவசாயிகள் தாங்கள் நடத்தும் போராட்டம் பற்றி விளக்கிக் கூறியது தங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டனர். இதற்கிடையில் அங்கு வந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சி வார்த்த நடத்தி பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்தனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜான்வி உறுதி அளித்தார்.

இதையடுத்து அவர் தந்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் விவசாயிகள் நம் நாட்டின் இதயம். இந்த நாட்டிற்காக அவர்கள் ஆற்றும்பணி மதிக்கத்தக்கது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தீர்மானம் விரைவில் வரும் என்று நம்புகிறேன் என்றார்.நடிகை கங்கனா ரனாவத் ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். இது சர்ச்சையானது. ஆனாலும் பல பிரபலங்கள் இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் வாய்மூடி மவுனமாக இருக்கின்றனர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி திரையுலகுக்கு வந்து சில வருடங்களே ஆகிறது. சிறந்த நடிகை அழகானவர் என ரசிகர்கள் அவரைப்பற்றி கருத்து தெரிவிக்கின்றனர். தாயைப்போல் ஒரு பயிற்சி பெற்ற கதக் நடனக் கலைஞர் ஜான்வி. தனது நடன திறமையை வெளிப்படுத்தும் விதமாக அப்போது இணைய தளத்தில் நடனம் ஆடி வீடியோக்கள் பகிர்கிறார்.

சமீபத்தில் கூட தனது திறமையை வெளிப்படுத்தும் விதமாகப் பெல்லி டான்ஸ் அதாவது இடுப்பு நடனத்தின் ஒரு காட்சியை வீடியோவாக பகிர்ந்தார். அப்போது இது 'காணாமல்போன போஸ்ட் பர்ரிட்டோ பெல்லி டான்ஸ் அமர்வுகள்' என்ற அவர் குறிப்பிட்டிருந்தார். ஜான்வியை தமிழில் அல்லது தெலுங்கில் அறிமுகப்படுத்த அவரது தந்தை போனி கபூர் எண்ணி உள்ளார்.

You'r reading பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் சிக்கிய நடிகை... Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை