தமிழில் வந்த நெடுநல்வாடை தெலுங்கில் பேசுகிறது..

Advertisement

ஒரு நல்ல படைப்பு தனக்கான அங்கீகாரத்தை அதுவாகவே தேடிக்கொள்ளும் என்பதற்கான சாட்சியாக இருக்கிறது நெடுநல்வாடை திரைப்படம். கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் நெடுநல்வாடை. தமிழ் இலக்கியத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைத்து மிக அற்புதமான கதையை எழுதி, வெகு சிறப்பான அழகியலோடு படத்தை இயக்கி இருந்தார் அறிமுக இயக்குநர் செல்வ கண்ணன். படத்தின் சிறப்பம்சங்கள் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது. 2019-ல் சிறந்த படம் எனப் பலரும் தங்கள் விரல்களாலும் குரல்களாலும் நெடுநல்வாடையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தார்கள். இப்படி எல்லோராலும் பேசப்பட்ட இப்படம் தற்போது தெலுங்கு பேசியிருக்கிறது.

தெலுங்கில் நல்ல சினிமாவை விரும்பி வரவேற்கும் சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் நெடுநல்வாடை படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி, மிகச்சிறப்பான முறையில் டப்பிங் உள்ளிட்ட பல்வேறு டெக்னிக்கல் பணிகளைக் கோர்த்துப் பொங்கல் வெளியீடாக டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியான சில மணி நேரங் களில் படம் பற்றி மிக பாசிட்டிவான கமெண்ட்ஸ் வரத்துவங்கி இருக்கிறது. கலையும் உணர்வுகளும் மொழிக்கு அப்பாற்பட்டது என்பதை நெடுநல்வாடை படமும் உறுதி செய்திருக்கிறது.

தெலுங்கில் இப்படம் மொழிமாற்றம் செய்து வெளியானது குறித்து மகிழ்ச்சியோடு இயக்குநர் செல்வ கண்ணன் கூறியதாவது, "ஒரு நல்ல படைப்புக்காக நாம் சிலவற்றைத் தியாகம் செய்யும் போது அந்தப்படைப்பு நிச்சயம் நமக்கான அங்கீகாரத்தைத் தந்தே தீரும். நாம் சிந்திக்கும் ஒன்று, நாம் உணர்ந்த வலி, சோகம், சுகம், கண்ணீர், துரோகம், அவமானம் இவையெல்லாம் உலகில் எங்கோ இருப்பவர்களுக்கும் கனெக்ட் ஆகிறதென்றால் அந்தப் படைப்பு கனமானது என்பதை உறுதியாக நம்புகிறவன் நான். அந்த நம்பிக்கைக்குச் சான்றாக இப்படத்தின் தெலுங்கு வெர்சனைப் பார்த்துவிட்டுப் பாராட்டுபவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது. இந்த நேரத்தில் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த என் தயாரிப்பாளர்கள், நண்பர்கள், படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>