தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தி வரும் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு வரிசையில் காத்திருக்கும் எந்த படம் முதலில் திரைக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் முதலில் விஸ்வரூபம் என்றும் தொடர்ந்து காலா ரிலீசாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ் திரையுலகம் நடத்தி வந்த வேலைநிறுத்தம் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலைநிறுத்தம் முடிந்தவுடன் ரிலீசுக்காக காத்திருக்கும் திரைப்படங்களை எந்த வரிசையில் ரிலீஸ் செய்வது என்ற குழப்பம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்கம் பிரச்சனையை தீர்க்க முடிவு செய்த நிலையில், முதலில் ஏற்கனவே சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களை ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.
தமிழ் திரைத்துறையினர் நடத்தி வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்ததும், ரஜினியின் 'காலா' திரைப்படத்தை திட்டமிட்டபடி ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடியாது. அதற்கு முன்னர் சென்சார் சான்றிதழ் வாங்கிய கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' உள்பட அனைத்து படங்களும் ரிலீஸ் செய்த பின்னரே காலா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- thesubeditor.com