சிம்புவின் பாடலை வெளியிடும் தனுஷ்

நடிகர் சிம்பு   இசையமைப்பாளராக அறிமுகமாகும்  ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில்  சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா  விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.இப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்களை டிசம்பர் 6ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.  இதன் பாடல்களை தனுஷ் வெளியிட இருப்பதாக சந்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

சிம்பு இசையில் உருவான பாடல்களை தனுஷ் வெளியிடுவது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

READ MORE ABOUT :