ஹாலிவுட் மிகப் பெரிய ஸ்டண்ட் ரெமி ஜூலியன், தனது 90 வயதில் கொரோனா பாதிப்பில் இறந்தார். ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி, எ வியூ டு கில், லைசன்ஸ் டு கில் போன்ற பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேங்கர் லாரிகளில் மோதும் பயங்கர சண்டை காட்சிகள் அமைத்து புகழ் பெற்றவர் ரெமி ஜூலியன். இது தவிர ஹாலிவுட் மற்றும் பல்வேறு மொழி படங்களில் 1400 படங்களில் சண்டை காட்சிகள் அமைத்தவர். ஆபத்தான சண்டை காட்சிகளை நடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் விஞ்ஞான முறையில் அமைத்தவர் ரெமி. இதனால் அவருக்கு ஹாலிவுட் திரையுலகில் பெரும் வரவேற்பு இருந்தது. திரையில் அக்காட்சிகள் பிரமாண்டமாக காணப்பட்டாதால் ரசிகர்களிடமும் அவருக்கு பெயர் கிடைத்தது. ரெமிக்கு 90 வயது ஆகிறது. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணம் அடைந்தார்.
ஜனவரி மாதம் தொடக்கத்தில் இருந்து மொன்டர்கிஸ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார் ரெமி. அவரது மரணம் குறித்து உறவினர் ஒருவர் கூறியதாவது: 2 தினங்களுக்கு முன் ரெமி உடல்நிலை மோசம் அடைந்தது. அவருக்கு சுவாச கருவியில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. டாக்டர்கள் தீவிரமாக முயன்றும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றார். 1969 ஆம் ஆண்டின் தி இத்தாலியன் ஜாப் திரைப்படத்தில் ரெமி ஜூலியன் மிகவும் பிரபலமானவர். அதில் அவரது துணிச்சலான ஓட்டுநர் திறன்கள் மற்றும் அவர் உருவாக்கிய காட்சிகளின் துல்லியம் எல்லோரையும் கவர்ந்தது. ஜூலியன் ஏப்ரல் 17, 1930 அன்று பிரான்ஸ் நாட்டில் சிப்பாய் என்ற கிராமத்தில் பிறந்தார், மேலும் மோட்டார் சைக்கிள் சவாரிகளில் சாதனை படைத்தார்.
1957 வாக்கில், அவர் பிரெஞ்சு மோட்டோகிராஸ் சாம்பியனாக இருந்தார், மேலும் 1964 ஆம் ஆண்டு திரைப்படமான பேண்ட மாஸில் ஜீன் மரைஸுக்காக தனது திரைப்பட வாழ்க்கையை இரட்டிப்பாக்கத் தொடங்கினார். அவர் 1400 திரைப்படங்களி பணியாற்றி உள்ளார். ஆறு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ஜூலியனின் பணி உலகளவில் மில்லியன் கணக்கான சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டது. சாதாரண கார்களை கொண்டு அசாதாரணமான காரியங்களைச் செய்வதில் வல்லவராக விளங்கினார், "டேங்கர் சேஸ் அவர் உருவாக்கிய மிக ஆபத்தான வரிசை என்று ஹாலிவுட் இயக்குனர் ஜான் க்ளென் தெரிவித்தார். ரெமி உண்மையில் சரளமாக ஆங்கிலத்தைப் பேசவில்லை, ஆனாலும் அவரை ஹாலிவிட் இயக்குனர்கள் தவிர்க்காமல் திறமையை பயன்படுத்தினர். அவர் வெறும் துணிச்சலோடு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கவில்லை அதற்கும் மேல் திறமையோடு ஆபத்தானவைகளையும் ஆபத்தில்லாமல் வடிவமைத்தார் என்கிறது ஹாலிவுட் திரையுலகம்.