நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மனம் கொத்தி பறவை. இதில் ஹீரோயினாக நடித்தவர் ஆத்மியா ராஜன் இவரது திருமணம் இன்று நடந்தது. கேரளாவின் கானூரில் கடல் பொறியாளராக உள்ள சனூப்பை திருமணம் செய்து கொண்டார். இது இருகுடும்பதார் பேசி முடிவு செய்து நடந்த திருமணம் ஆகும். மேலும் நாளை ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடக்க உள்ளது. சமுத்திரக்கனி நடிக்கும் வெள்ளை யானை படத்தில் ஆத்மியா நடிக்கிறார். இப்படத்தை சுப்பிரமணியம் சிவா இயக்குகிறார். யோகி பாபு, ராமதாஸ், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். கொரோனா தளர்வில் பல நடிகர், நடிகைகள் திருமணம் எளிமையாக, மற்றும் தடபுடலாக என இரண்டு பாணியில் நடந்துள்ளது.
நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருந்தார். அப்போது அவரது திருமணத்தை முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். பலமுறை பேசியும் திருமணத்துக்கு சம்மாதிக்காமலிருந்த காஜல் ஒரு கட்டத்தில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். தனது நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் கவுதம் கிட்லுவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா, சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் கொரோனா லாக் டவுன் தளர்வில் உதப்பூர் அரண்மனை நடசத்திர ஓட்டலில் தடபுடலாக நடந்து முடிந்தது. இதில் சிரஞ்சிவியின் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்துகொண்டது. நடிகை மியா ஜார்ஜ் தொழில்அதிபர் அஸ்வின் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான் டெல்லியை சேர்ந்த தொழி அதிபர் ரோஹித் என்பவரை மணந்தார். காஜல் அகர்வால், கவுதம் கிட்ச்லு தம்பதிகள் திருமணம் முடிந்த சில நாட்களில் தேனிலவுக்காக மாலத்தீவு சென்றனர். அங்கு ஒரு மாதம் அவர்கள் தேனிலவை கொண்டாடினார்கள். அதன்பிறகு காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள திரும்பி வந்தார் . சிரஞ்சீவி நடிக்கும் ஆசார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். அதேபோல் நிஹாரிகா கணவருடன் மாலத்தீவு சென்று அங்கு தேனிலவும் புத்தாண்டும் கொண்டாடினார். அதன்பிறகு ஐதராபாத் திரும்பியவர் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆத்மியாவை பொறுத்தவரை அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. திருமணத்துக்கு பிறகு அவர் நடிப்புக்கு முழுக்குபோடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.