தமிழ் திரையுலகில் சகஜ நிலை திரும்புகிறது.. பட பூஜை, ஆடியோ விழா, ரிலீஸ் என பரபரக்கிறது..

Advertisement

கொரோனா ஊரடங்கள் கிட்டதட்ட 9 மாதங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை எதுவும் நடக்கவில்லை. படிப்படியாக திரையரங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. முதலில் படப்பிடிப்புக்கு பிந்தய பணிகள் தொடங்கப்பட்டன். பின்னர் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து கடைசியாக தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து திரையுலகில் மீண்டும் சகஜ நிலை திரும்பி வருகிறது. மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் பொங்கல் தினத்தில் வெளியானது. முன்னதாக தீபாவளி யொட்டி சந்தானம் நடித்த பிஸ்கோத் உள்ளிட்ட சில படங்கள் வெளியாகின. கடந்த 4 வாரமாக அவ்வப்போது புதியபட ஆடியோ விழாக்கள் நடக்கிறது புது பட பூஜைகளும் நடந்துவருகிறது.

அதே வேகத்தில் இன்று புதிய பட தொடக்கவிழா நடந்தது. எம் ஐ கே புரொடக்‌ஷன்ஸ் (பி)லிமிடெட் (MIK Productions (P) Ltd) சார்பில் விமல் மற்றும் குட்டிப்புலி சரவண சக்தி இணையும் படம் எம் ஐ கே புரடக்‌ஷன் நம்பர் 1 (MIK Production No 1) என்ற தற்காலிக தலைப்புடன் பூஜையுடன் துவங்கியது. பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணைந்து நடிக்கின்றனர். பி.இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார்.

மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. பல வெற்றி படங்களில் தனது சிறந்த ஒளிப்பதிவை வழங்கிய வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி சண்டைக்காட்சிகளுக்கு பெயர்பெற்ற கனல் கண்ணன் இப்படத்தின் ஸ்டண்ட் பயிற்சி அளிக்கிறார். இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. கோபி கிருஷ்ணா எடிட்டிங் செய்கிறார். ஜெயகுமார் அரங்கம் அமைக்கிறார். எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கர்ண ராஜா. புரொடக்சன் எக்ஸிகியூட்டிவ்: தர்மராஜ் மாணிக்கம்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>