கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்.. நடிகை - இயக்குனர் திருமணம்..

Advertisement

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியுடன் திருமண முடிச்சுப் போடத் தயாராகி விட்டார். 'கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்தார். இதில் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர், பிரபல தொலைக் காட்சி தொகுப்பாளரான ரக்ஷன் நிரஞ்சனியின் ஜோடியாக நடித்தார்.தேசிய விருது திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் கனியைத் திருமணம் செய்து கொண்டவர் இயக்குனர் திரு.

இவர் தேசிங் பெரிய சாமி மற்றும் நிரஞ்சனியின் திருமணம் பற்றிய அறிவிப்பை தனது சமூக வலைதளத்தில் தேசிங் பெரியசாமி மற்றும் நிரஞ்சனியின் பெயருடன் திருமண அழைப்பிதழின் படத்துடன் தகவல் பகிர்ந்து வெளிப்படுத்தினார்.'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடிப்பதற்கு முன் வாய் மூடி பேசவும், சிகரம் தொடு, காவிய தலைவன் மற்றும் கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் நிரஞ்சனி.தைமாதம் வருவதற்கு முன்பே டிசம்பரிலும் அதற்கு முன்பும் பல நடிகைகள் திருமணப் பந்தத்தில் இணைந்தனர்.

நடிகை காஜல் அகர்வால் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருந்தார் அப்போது அவரது திருமணத்தை முடிக்கப் பெற்றோர் முடிவு செய்தனர். பலமுறை பேசியும் திருமணத்துக்கு சம்மதிக்காமலிருந்த காஜல் ஒரு கட்டத்தில் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தார். தனது நீண்ட நாள் பாய் ஃபிரண்ட் கவுதம் கிட்லுவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா , சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணம் கொரோனா லாக் டவுன் தளர்வில் உதப்பூர் அரண்மனை நட்சத்திர ஓட்டலில் தடபுடலாக நடந்து முடிந்தது. இதில் சிரஞ்சீவியின் ஒட்டு மொத்த குடும்பமும் கலந்துகொண்டது. நடிகை மியா ஜார்ஜ் தொழில் அதிபர் அஸ்வின் ஜார்ஜ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். மம்மூட்டியுடன் மாமாங்கம் படத்தில் நடித்த பிராட்சி தெஹலான் டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ரோஹித் என்பவரை மணந்தார்.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மனம் கொத்தி பறவை படத்தில் இதில் ஹீரோயினாக நடித்த ஆத்மியா ராஜன் திருமணம் கேராளாவில் நேற்று நடந்தது. தொழில் அதிபர் சனூப்பை திருமணம் செய்து கொண்டார். இது இருகுடும்பத்தார் பேசி முடிவு செய்து நடந்த திருமணம் ஆகும். சமுத்திரக் கனி நடிக்கும் வெள்ளை யானை படத்தில் ஆத்மியா நடிக்கிறார். இப்படத்தைச் சுப்பிரமணியம் சிவா இயக்குகிறார். யோகி பாபு, ராமதாஸ், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

முன்னதாக காஜல் அகர்வால், கவுதம் கிட்ச்லு தம்பதிகள் திருமணம் முடிந்த சில நாட்களில் தேனிலவுக்காக மாலத்தீவு சென்றனர். அங்கு ஒரு மாதம் அவர் கள் தேனிலவை கொண்டாடினார்கள். அதன்பிறகு காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திரும்பி வந்தார் . சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். அதே போல் நிஹாரிகா கணவருடன் மாலத்தீவு சென்று அங்கு தேனிலவும் புத்தாண்டும் கொண்டாடினார். அதன்பிறகு ஐதராபாத் திரும்பியவர் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
/body>