ஒரு திரைப்படத்திற்கு அங்கீகாரம் என்பது ரசிகர்களின் கருத்துக்கள் மட்டும் இல்லாமல் அப்படத்திற்கு கிடைக்கும் விருதுகளை பொறுத்து தான் அமையும். ஓடிடி தளத்தில் வெளியான சுரரைப்போற்று திரைப்படம் பலர் மனதை கவர்ந்தது மட்டுமில்லாமல் பல பிரிவில் விருதுகளையும் பெற்று வருகிறது.ஆனால் இப்பொழுது நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு சுரரைப்போற்று திரைப்படம் உயர்ந்துள்ளது.அதாவது ஆஸ்கர் பட்டியலில் சூரரைப்போற்று இடம்பெற்றுள்ளது. இஇதுகுறித்து சூர்யாவின் ரசிகர்கள் அளவில்லாத சந்தோஷத்தில் உள்ளனர். ஆஸ்கர் விருது பட்டியலில் தமிழ் படங்கள் வந்துவிடாதா என்பது பல இயர்க்குனர்களின் கனவுகளாகவே இருந்து வருகிறது. இது வரை இந்திய மொழி படங்கள் ஆஸ்கர் பட்டியளுக்கு தேர்வானது மிகவும் குறைவுதான்.
இது வரை இந்திய படங்களின் வரலாற்றில் ஆஸ்கரின் இறுதி பட்டியலுக்கு தேர்வானது மூன்று படங்கள் மட்டுமே. இறுதி பட்டியலில் தேர்வானாலும் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல. முதலில் எப்படி ஒரு திரைப்படம் ஆஸ்கருக்கு செல்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.. ஒரு படம் ஆஸ்கருக்கு செல்ல அமெரிக்காவில் இருக்கும் தியேட்டர்களில் சிறிது காலமாவது அப்படம் திரையிடப்பட்டு இருக்க வேண்டும். ஆஸ்கரை பற்றி பேசும் பொழுது பார்த்திபனின் ஒத்த செருப்பு, கமலஹாசனின் உத்தம வில்லன் போன்ற திரைப்படங்கள் நினைவிற்கு வரும். இயக்குனர் பார்த்திபன் அமெரிக்கா சென்று அவரது திரைப்படத்தை திரையிட்டார். ஆஸ்கர் விருதின் அடுத்தகட்ட படி 12,500 டாலர் செலுத்தி திரைப்படத்தை பதிவு செய்யவேண்டும்.
பிறகு அமெரிக்காவில் அமைக்கப்பட்ட குழுவின் கீழ் திரைப்படம் quality control check செய்ய வேண்டும். பிறகு ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறும். அமெரிக்காவில் திரையிடப்பட்ட படம் என்றால் 12,500 டாலர் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நமது சூரரைப்போற்று திரைப்படமும் இந்த வழியில் தான் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா காலம் என்பதால் பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தை தேர்வு செய்து அங்கு ரிலீஸ் செய்தது. இதனால் ஓடிடியில் வெளியான திரைப்படமும் ஆஸ்கருக்கு அனுப்பலாம் என்று ஆஸ்கர் குழுமம் ஒரு பயனுள்ள செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் பெயரில் பல திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் படையெடுக்க ஆரம்பித்துள்ளது. ஆஸ்கர் விருதுகளின் நிகழ்ச்சி பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் தேதி வரை திரைப்படத்திற்கான வாக்கு எடுப்புகள் நடைபெறும்.
அதிக வாக்குகளை பெற்ற திரைப்படங்களின் பட்டியல் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகும். இறுதி பட்டியலின் பரிந்துரை மற்றும் இறுதி பட்டியல் மார்ச் 5 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் வெளியாகும். ஏப்ரல் 15 தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை oscar nominees luncheon நிகழ்ச்சி நடைபெற்று வெற்றியாளர்களின் தேர்வு நடைப்பெறும். கடைசியில் ஏப்ரல் 25 ஆம் தேதி மேடையில் வெற்றியாளர்களை அறிவித்து விருதுகளை வழங்குவர். முதன் முதலில் சூர்யாவின் திரைப்படம் ஆஸ்கருக்கு வந்துள்ளது. இதுவே தமிழ் மக்களுக்கு சந்தோசம் தான் ஆனால் இந்த முறையாவது ஆஸ்கருக்கு தேர்வு பெற்று விருதுகளை பெற வேண்டும் என்பது பலரின் பிராத்தனையாக இருக்கிறது. பொறுத்து இருந்து பார்த்தால் 'நாளை நம் வாசமாகும்' என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து செயல்படுவோம்.