Friday, May 14, 2021

பழிவாங்க காத்திருக்கும் கவர்ச்சி நடிகையால் பரபரப்பு.. யாரை? எப்போது?

by Chandru Jan 31, 2021, 09:52 AM IST

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சில சமயம் நிஜவாழ்க்கையிலும் சினிமா பாணியிலேயே வாழ்க்கையை நடத்த முயல்கின்றனர். நடிகை காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். பிறகு அவருடன் மாலத்தீவுக்கு தேனிலவுக்கு சென்றவர் அங்கு சினிமாவில் ஹீரோவுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவதுபோல் கணவரை கட்டிப்பிடித்து டூயட் பாடி ஆடினார். பல இடங்களில் அவருடன் நெருக்கமாக நின்று புகைப்படங்கள் எடுத்து பகிர்ந்தார். அதேபோல் நடிகை நிஹாரிகாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சைதன்யா என்பவரை மணந்தார், இவர் சிரஞ்சீவின் தம்பி நாகபாபு மகள். தமிழில் ஒரு நல்ல நாள பார்த்து சொல்றேன் படத்தில் நடித்தார். சினிமா பாணியில் தனது திருமணத்தை அரங்கேற்றினார்.

சரித்திர படங்களில் அரண்மனையில் மன்னர்கள் தங்கள் மகளுக்கு தடபுடலாக திருமணம் நடத்துவதுபோல் தனது திருமணம் நடக்க வேண்டும் என்று எண்ணினார். அதன் படி அரண்மனைகள் நிறைந்த ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள அரண்மனை ஓட்டலில் திருமணத்தை நடத்தினார். அதன்பிறகு கணவருடன் அரண்மனை பகுதிகளுக்கு சென்று உலா வந்து அவருடன் நெருக்கமாக இருப்பது மற்றும் விதவிதமான போஸ்களில் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டு அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். சினிமாவில் பழி வாங்குல் பெண்கதாபாத்திரங்கள் வருவதுபோல் ஒரு நடிகை பழிக்கு பழி வாங்க உள்ளதாக இணையதளத்தில் மெசேஜ் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பிரபாஸ், அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தில் கவர்ச்சி உடை அணிந்து மனோஹரி பாடலுக்கு நடனம் ஆடியதுடன் கார்த்தி, தமன்னா நடித்த தோழா படத்தில் டோர் நம்பர்.. பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர்.

இது தவிர டெம்பர், ஊபிரி போன்ற தெலுங்கு மற்றும் ஏராளமான இந்தி படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நோரா பதேஹி. இவருக் கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. அவர்களை தக்க வைக்க அடிக்கடி கவர்ச்சி பொங்க இறுக்கமான உடைகள் அணிந்து அதனை இன்ஸ்டாகிராம், டிவிட்டரில் வெளியிடுவார். அதற்கு ஏகபட்ட வரவேற்பும் இருக்கும். இவர் தனது இணையதள பக்கத்தில் தற்போது பழி வாங்கப்போவதாக கோபமாக ஒரு மெசேஜ் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் மனம் மாறுவதாக இல்லை. பழிவாங்குவதாக உள்ளேன். மேலும் என்னை நம்புங்கள்.. இது நிறைவேற்றப்படும் என மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். யாரை ? எதற்காக? எப்போது? பழி வாங்கப்போகிறார் என்பது பற்றிய விவரமெல் லாம் எதுவும் இல்லை.

ஆனால் அதை செய்து முடிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். அவரை யாராவது காதலித்து ஏமாற்றிவிட்டார்களா? பட வாய்ப்பு தருவதாக கூறி மறுத்துவிட்டர்களா? அல்லது தான் நடிக்கும் படம் அல்லது வெப் ம்சீரிஸில் வரும் வசனத்தை பகிர்ந்திருக்கிறாரா என்பதுபற்றியெல்லாம் எந்த தகவலும் அதில் இல்லை. நோராவின் இந்த மெசேஜ் ரசிகர்களை அதிர்ச்சியிலும் கேள்வியிலும் ஆழ்த்தி இருக்கிறது. இப்படியொரு மெசேஜ் பகிர்ந்தது பற்றி அவரிடம் பலரும் விசாரித்த வண்ணமிருக்கின்றனர். அவரஒ சைலண்ட் மோடில் இருக்கிறார். நோரா கடைசியாக ரெமோ டிசோசாவின் ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்தில் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் ஆகியோருடன் நடித்தார். தற்போது தில்பார் பாடலுக்கு ஜான் ஆப்ரகா முடன் சத்யமேவ ஜெயதே படத்தில் ஆட்டம் ஆடி இருக்கிறார்.

You'r reading பழிவாங்க காத்திருக்கும் கவர்ச்சி நடிகையால் பரபரப்பு.. யாரை? எப்போது? Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை