ஜோடி கிடைக்காத இளம் ஹீரோ தனிமை சுற்றுலா.. கடலுடன் பேசி பொழுதை கழித்தார்..

Advertisement

கோலிவுட் முதல் பாலிவுட் வரை இளம் நடிகர் நடிகைகள் ஜோடி போட்டு சுற்றுகின்றனர். ஆனால் ஜோடி இல்லாமல் தனிமையில் வாடிக் கொண்டிருக்கிறார் ஒரு இளம் நடிகர். தமிழில் மைதிலி என்னை காதலி, கொடி பறக்குது, சத்யா, அக்னி நடசத்திரம் என பலபடங்களில் நடித்தவர் நடிகை அமலா. இவர் டோலிவுட் நடிகர் நாகார்ஜூனாவை காதலித்து மணந்தார். இவர் களது மகன் அகில். குழந்தையாக இருக்கும்போதே சுட்டி குழந்தை என்ற படத்தில் அகில் நடித்தார். தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். கோலிவுட் நடிகர்கள், டோலிவுட் நடிகர்கள் பற்றி அடிக்கடி சில நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அதில் சில நிஜமாகி திருமணமும் செய்திருக்கின்றனர். அகிலின் சகோதரர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து மணந்தார். அகிலுக்கும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு ஸ்ரேயா புபால் என்வருடன் அகிலுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

ஸ்ரேயா புபால் பிரபல தொழில் அதிபர் ஜிவி கிருஷ்னா ரெட்டியின் மகள். ஆனால் ஒருவருடம் ஆகியும் இவர்களது திருமணம் நடக்கவில்லை. பின்னர் திருமணம் ரத்து செய்யப்பட்டது தெரிய வந்தது. அதற்கான காரனம் பற்றி இருதரப்பும் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. இதனால் அகில் அப்செட் ஆனார். தற்போது படங்களில் நடித்தாலும் அவருக்கு நெருக்கமான தோழிகள் என்று சொல்லும் அளவுக்கு எந்த ஹீரோயினுடனும் அவர் பழகியதாக தெரியவில்லை. இன்னும் சிங்கிள் என்ற ஸ்டேட்டஸில்தான் இருக்கிறார். சமீபத்தில் பல நட்சத்திரங்கள் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றனர். காஜல் அகர்வால் தனது கணவர் கவுதம் கிட்ச்லுவுடன் சென்று பொழுதை கழித்தார். நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் சென்றார். டாப்ஸி உள்ளிட்ட இன்னும் சிலர் பாய்ஃபிரண்ட் மற்றும் குடும்பத்தினருடன் சென்றனர். நடிகர் அகில் மாலத்தீவில் தற்போது விடுமுறை பயணத்தை கழித்து வருகிறார்.

ஆனாலும் அவர் ஜோடி இல்லாமல் சோலோவாக சுற்றிகொண்டிருக்கிறார். கடலை வெறித்துப் பார்த்தபடியும், மணலில் படுத்தும் அவர் பொழுதை கழித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட படங்களளும் அவர் மட்டுமே மாலத்தீவில் சுற்றி திரிவது போன்ற படங்கள் வெளியிட்டிருக்கிறார். கடல் அருகே அவர் தனிமையில் பேசிக்கொண்டிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பதிவில் படத்தை வெளியிட்ட அகில். அமைதியை அனபவிக்கிறேன். சீக்கிரம் உன்னுடன், உன்னை பார்க்க திரும்பி வருவேன். அன்பான தீவுக்கு குட் பை மற்றும் நன்றி என கூறி உள்ளார். மற்றொரு படத்தை வெளியிட்டு இது சூர்ய உதயமா, அஸ்தமனமா என்று கேட்டிருக்கிறார். அழகான ஹீரோன்னு பேர் வாங்கிட்டீங்க இன்னுமா உங்களுக்கு கேர்ள் ஃபிரண்ட் கிடைகல என்று சில ரசிகர்கள் அகிலுக்காக ஆதங்கப்பட்டு குசலம் விசாரித்திருக்கின்றனர். தெலுங்கில் தற்போது மோஸ்ட் எலிஜிபில் பேசுளர் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>