என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம்.. நடிகர் ராஜ்கிரணின் மகன் இயக்குகிறார்..

by Chandru, Feb 1, 2021, 12:15 PM IST

திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சில நடிகர்கள் தங்கள பாலிசியை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ச்சியாக கடைபிடிக்கின்றனர். விஜய்காந்த் தான் எல்லா படத்திலும் ஹீரோவாகவே நடித்தார். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை கடைபிடித்தார் ரேவதி. அதுபோல் எந்த சமயத்திலும் வில்லனாக நடிப்பதில்லை என்ற பாலிசியுடன் இருப்பவர் ராஜ்கிரண், சில்வர் ஜுப்ளி படத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு ஒரு கட்டத்தில் படம் இல்லாத நிலை ஏற்பட்டது அப்போது ஷங்கரிடமிருந்து அழைப்பு வந்தது. ரஜினிகாந்த் நடிக்கும் சிவாஜி படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டார். ஆனால் வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

1991-ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரிப்பில் கஸ்துரி ராஜா இயக்கத்தில் நடிகர் ராஜ்கிரண் - மீனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'என் ராசாவின் மனசிலே'. படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகப்படுத்தினார். நடிகர் ராஜ்கிரணின் சினிமா வாழ்க்கையிலும், நல்ல சினிமா ரசிகர்களின் ரசனையிலும் நீங்கா இடம் பிடித்த படம் இது. 90-ஸ் கிட்ஸ் மட்டும் அல்ல இப்போதுள்ள 2K கிட்ஸுக்கும் பிடிக்கும் அளவிற்கு அப்படம் இன்றும் நிறம் மாறாமல் இருக்கிறது.

தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரனின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்க இருக்கிறார். இது குறித்து நடிகர் ராஜ்கிரன் வெளியிட்டுள்ள செய்தி: இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள்... "என் ராசாவின் மனசிலே" இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்து விட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்... அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப் பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். இவ்வாறு ராஜ்கிரண் கூறி உள்ளார்.

You'r reading என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகம்.. நடிகர் ராஜ்கிரணின் மகன் இயக்குகிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை