Saturday, Feb 27, 2021

கவுதம் மேனனுடன் இணைந்த 3 இயக்குனர்கள்.. குட்டி ஸ்டோரி பட அனுபவம் பகிர்ந்தனர்..

by Chandru Feb 5, 2021, 19:34 PM IST

ஆந்தாலஜி வகை படங்கள் ஒரு புதிய வடிவத்தினை மாற்றனுபவத்தை தருகிறது. சமீபத்திய ஆந்தாலஜி படங்கள் உலகளவில் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவின் பெரும் நட்சத்திர பட்டாளமும், உயர்தர தொழில்நுட்ப குழுவினர் இணைந்து பணியாற்றியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் “குட்டி ஸ்டோரி”. வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் ஐசரி கணேசன் தயாரித்திருக்கிறார். மனித மனங்களின் மென்னுணர்வுகளை மையப்படுத்திய நான்கு கதைகளை கூறும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தினை இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இணைந்து குட்டி ஸ்டோரி பெயரில் இயக்கியுள்ளனர். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 12 ம் தேதி திரைக்கு வருகிறது. படம் பற்றி இன்று நடந்த மீடியா சந்திப்பில் இயக்குனர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். கவுதம் மேனன் பேசியதாவது: குட்டி ஸ்டோரி ஒரு கூட்டணி இணைந்த படம்.

இப்படியொரு ஐடியாவை என்னிடம் ஐசரி கணேஷ் சொன்னார். இயக்குனர் விஜய் எனக்கு போன் செய்து பேசினார். பிறகு வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இதில் இணைந்தனர். எல்லோரும் ஜீம் வீடியோவில் மூன்று நான்கு முறை பேசினோம். எல்லோரும் கதை சொனார்கள். நான் சொல்லவில்லை. என்னுடைய படத்தில் நானே நடித்திருக்கிறேன். லாக்டவுனாக இருந்ததால் மற்ற நடிகர்களை கேட்கவில்லை. வருவார்களா என்ற சந்தேகம் இருந்தது. என்னுடன் அமலா பால் நடித்திருக்கிறார். எல்லோருடைய படங்களும் போஸ்ட் புரொடக்‌ஷன் நடந்த போது பார்த்திருக்கிறோம் இதில் இணைந்து பணியாற்றியது சந்தோஷம். இதற்கு பிறகு நிறைய இயக்குனர்கள் இதுபோல் இணைந்து பணியாற்ற வருவார்கள் என்று நம்புகிறேன்.

விஜய்: குட்டி ஸ்டோரி ரொம்பவும் நம்பிக்கையான படம். என்னுடைய தாய்வீடு என்று சொல்லும் அளவுக்கு வேல்ஸ் ஐசரி கணேஷ்சார் கல்லூரியில் தான் படித்தேன். இதில் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்னவென்றால் கவுதம்சார், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமியுடன் பணியாற்றியது. இணைந்து பணியாற்றியதில் யாருக்கும் எந்த உரசலும் இல்லை. எல்லோருமே கூட்டணியாக இணைந்து பணியாற்றியது ஆரோக்கியமாக இருந்தது. ஒவ்வொரு இயக்குனரும் தங்கள் முத்திரையை பதித்திருக்கின்றனர்.

வெங்கட் பிரபு: ஐசரி கணேஷ் இதற்கு ரொம்ப சபோர்ட்டா இருந்தார். என்ன டாப்பிக்கில் இந்த படம் செய்யலாம் என்று எல்லோரும் பேசியபோது லவ் ஸ்டோரிஸ் என்றார்கள். அப்பவே எனக்கு தெரியும் கவுதம் மேனனை அடித்துக் கொள்ள முடியாது என்று பின்னிபெடலெடுத்திடுவார் என்று தெரியும் பிறகு கவுதம் சாரிடமே நிறைய ஐடியா கேட்டோம் நிறைய சொன்னார். புதுசா ஏதாவது செய்யணும் என்று அனிமேஷன் பகுதியை நான் செய்திருக்கிறேன். வீடியோ கேமிற்குள் லவ் செய்கிறார்கள் என்று என் கதை செல்லும். இதுவொரு புதுடெக்னாஜி என்று இதை செய்தேன். எதுவுமே கிடையாது ஆர்ட்டிஸ்ட் மட்டும் நடித்து புதிய உலகத்தையே உருவாக்கினோம்.

நலன் குமாரசாமி: இந்த கூட்டணியில் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய ஆந்தாலஜி படம் பிடிக்கும். பார்க்க ஆர்வமாக இருக்கும் எதிர்காலத்தில் நிறைய ஆனந்தாலஜி படம் வரும். இந்த படத்தில் விஜய்சேதுபதி எப்படி வந்தார் என்றால் அவரிடம் ஒரு ஹீரோயின் எப்படி நடிக்கிறார் என்பது பற்றி பேசியபோது நீ என்ன செய்கிறாய் என்றார். ஷார்ட் பிலிம் செய்யறேன் என்றேன் பிறகு கதையை கேட்டுவிட்டு நான் நடிக்கிறேன் என்று கூறிவிட்டார். பிறகு நிறைய பேசினோம். நடிப்புதான் இதில் முக்கியம் கமர்ஷியலான கதையை மையமாக வைத்துவிட்டு படமாக்கினேன். இவ்வாறு இயக்குனர்கள் பேசினார்கள்.

You'r reading கவுதம் மேனனுடன் இணைந்த 3 இயக்குனர்கள்.. குட்டி ஸ்டோரி பட அனுபவம் பகிர்ந்தனர்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை