மூத்த இயக்குனரிடம் பழைய நினைவு பகிர்ந்த ராதிகா..

90 களில் தமிழ், தெலுங்கு இருமொழிக்கும் தெரிந்த இயக்குனர்கள் என்றால் கே.பாலசந்தர், பாரதிராஜா, கே.விஸ்வநாத் என்று சிலரை விரல்விட்டு எண்ணிவிடலாம் பாலசந்தர், பாரதிராஜா பற்றி எல்லோருக்கும் தெரியும் விஸ்வநாத் இயக்கிய ஒரு படப் பெயரைச் சொன்னால் இந்தியா முழுவதுமே தெரியும். 1979ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான படம் சங்கரா பரணம். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் பார்த்துப் பாராட்டிய படம் என்று பெயர் பெற்றது மட்டுமல்ல தேசிய விருதுடன் மக்கள் மனங்களையும் வென்ற படம். சோமயாஜுலு, மஞ்சு பார்கவி நடித்திருந்தனர். பின்னர் இவர்கள் இருவருமே தமிழ்ப் படத்திலும் நடித்தனர்.

1985ல் சுவாதி முத்தியம் என்ற படத்தை இயக்கினார் விஸ்வநாத். இதில் கமல்ஹாசன் ராதிகா நடித்திருந்தனர். தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. இப்படமும் பல்வேறு விருதுகளை வென்றது. இதன் பிறகு பல்வேறு படங்களை இயக்கினார். ஐந்து தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில நந்தி விருதுகளைப் பெற்ற விஸ்வநாத், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு சிறப்பான வாழ்க்கையில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். 90 வயதான இயக்குனர் சுபப்பிரதம் படத்தை இயக்கினார். இதில் அல்லாரி நரேஷ் மற்றும் மஞ்சரி ஃபட்னிஸ் நடித்தனர்.
கே.விஸ்வநாத் பிறகு நடிகராக மாறினார்.

தமிழில் குருதிப் புனல், யாரடி நீ மோகினி ராஜபாட்டை உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இவரைப் பற்றி இந்த வர்ணனையெல்லாம் சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்புக்காகத் தான்.சுவாதி முத்யம் படத்தில் நடித்த நடிகை ராதிகா சமீபத்தில் ஐதராபாத்தில் இயக்குனர் கே விஸ்வநாத்தை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, சுவாதி முத்யம் (1985) மற்றும் சுவாதி கிரணம் (1992) ஆகிய இரண்டு படங்களின் நினைவுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.இயக்குனருடனான சந்திப்பு மற்றும் 80களில் அவருடன் படங்களில் பணியாற்றிய புகைப்படங்களைப் பகிர்ந்தார் ராதிகாசரத்குமார். ஐதராபாத்தில் விஸ்வநாத் சாரை சந்தித்ததில் மகிழ்ச்சி ஸ்வாதிமுத்யம், ஸ்வதி கிரணம், படங்களில் நடித்தது மறக்கமுடியாத தருணங்கள். அதில் நிறையக் கற்க முடிந்தது” என்றார்.

தமிழில் மட்டுமல்ல 80களில் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. நியாயம் காவாலி, அபிலாஷா, டோங்கா மொகுடு, ஆராதனா மற்றும் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தார். குணசித்ர நடிகையாக மாறிய பிறகு, சூர்யவம்சம், பிரேமா கதா மற்றும் வம்சோதரகுடு ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். நீண்ட இடை வெளிக்குப் பிறகு, அனில் ரவிபுடியின் ராஜா தி கிரேட் படத்தில் ரவி தேஜாவின் அம்மா பாத்திரம் ஏற்று நடித்தார். தனது தொலைக் காட்சி நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தபோதிலும், அவர் தனது கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :