கொரோனா காலகட்டம் திரையுலகில் பலரை தொற்றுக்குள்ளாக்கியது. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த திரையுலகினரும் கொரோனா தொற்றிலிருந்து தப்பவில்லை. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்று கடந்த ஆண்டு தகவல் வெளியானபோது திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மருத்துவமனையில் மாதக்கணக்கில் தங்கி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். அமிதாப்பச்சனை தொடர்ந்து அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் என குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பிறகு குணம் அடைந்தனர்.
மேலும் நடிகர்கள் விஷால், கருணாஸ், ராம் சரண், வருண் தேஜ். டாக்டர் ராஜசேகர, நடிகைகள் ஐஸ்வர்யா அர்ஜுன், ஜீவிதா, தமன்னா, நிக்கி கல்ராணி போன்ற பலர் பாதிக்கப்பட்டி சிகிச்சை பெற்றனர். மற்றவர்கள் குணம் அடைந்த நிலையில் டாக்டர் ராஜ்சேகர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்படிருந்தது. அவர் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசத்தில் (வெண்ட்டிலேட்டர்) வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பிறகே அவர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தார். அவர் மருத்துவமனியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் ஆக்ஸிஜன் சுவாசிப்பதில் பிரச்னை இருந்தது.
இதையடுத்து அவருக்கு மூக்கில் டியூப் மூலம் ஆக்ஸிஜன் செருகப்பட்ட நிலையில் வீடு திரும்பினார். அத்துடனே அவர் நடாமாடி வந்தார். 2 மாதத்துக்கு தற்போது பிறகு அவர் கொரொனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணம் அடைந்தார். அவருக்கு ஆக்ஸிஜன் டியூபும் அகற்றபட்டது. தற்போது படங்களில் நடிக்க புது தெம்புடன் தயாராகி விட்டார். புது இயக்குனர் இயக்கும் சேக்ஹர் என்ற படத்தில் நடிக்கிறார். இது அவரது 91வது படம், 92வது படத்தை கதம் படத்தை தயாரித்த சிஹ்வானி-ஷிவாட்மிகா, சிருஜன் யெர்ரபாபு, பார்கவா பொலுடடுஸு மற்றும் ஹர்ஷ பிரதாப் தயாரிக்கின்றனர்.