விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் எனப் பல படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. சூர்யாவின் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கி உள்ளார். மீண்டும் சூர்யாவுபார்க்கப்பட்டது. அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிறார்.இயக்குனர் ஹடன் அருவா என்ற படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா ஊரடங்கு குறுக்கிட்ட நிலையில் தடங்கல்கள் ஏற்பட்டன. 8 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படத்தில் நடித்து வந்தார். முதலில் தியேட்டரில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுக் காத்திருந்தனர்.
ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்படத்தை OTT தளத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக ஹரி குரல் கொடுத்தார். தியேட்டர்களால் தான் வளர்ந்தோம் அதை மறந்துவிட்டுப் படத்தை ஒடிடியில் வெளியிடுவது முறையல்ல என்றார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த அருவா டிராப் ஆனது. இதனால் ஹரி அடுத்து யார் படத்தை இயக்குவார் என்று எதிர்ரி அடுத்து அருண் விஜய் வைத்து இயக்கும் படம் ஏவி33 எனத் தற்காலிக பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் ஹீரோயினாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகைகள் ஐஸ்வர்யா மற்றும் ரமா ஆகியோர் படத்தில் இணைந்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் தனது சமூக ஊடக பக்கத்தில் அறிவித்தது. “திறமையான நடிகை ஐஸ்வரியா மற்றும் ராமா AV33 படத்தில் இணைகின்றனர். இது ஹரி இயக்கும் 16 வது படம் என கூறப்பட்டுள்ளது.இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய்யின் புதியபடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, பல அறிவிப்புகள் வந்துள்ளன. இந்தப் படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கருடன், பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, கே.ஜி.எஃப் புகழ் கருடா ராம், அம்மு அபிராமி, ராஜேஷ், இமான் அண்ணாச்சி, தலைவாசல் விஜய், புகழ், ஜெயபாலன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இந்த படம் அருண் விஜய்யின் 33 வது படம் மற்றும் இது ஒரு நகைச்சுவையுடன் கூடிய குடும்பபொழுதுபோக்கு படம் என்று கூறப்படுகிறது.
ஹரி கடைசியாக விக்ரம் நடித்த சாமி 2 படத்தை இயக்கினார். இந்த படம் அவரது முந்தைய சாமி படத்தின் தொடர்ச்சியாக உருவானது.இயக்குனர் அரிவாசகன், சினம் மற்றும் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் அருண் விஜய் நடிக்கிறார்.